விவசாயிகளுக்காக போராடியவரை மாணவி என்றும் பாராமல் குண்டர் சட்டத்தில் கைது செய்வதா? - சேலம் வளர்மதியின் பெற்றோர் வேதனை

By எஸ்.விஜயகுமார்

“என்னுடைய மகள் அரசுக்கு எதிராக போராடவில்லை. விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பறிக்கக்கூடாது என்றுதான் போராடினார். இதற்காக, மாணவி என்றும் பாராமல் குண்டர் சட்டத்தில் அவரை கைது செய்தது எங்கள் குடும்பத்துக்கு மன உளைச் சலை ஏற்படுத்தி உள்ளது” என்று வளர்மதியின் தந்தை மாதையன் கூறியுள்ளார்.

ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக நெடுவாசலில் போராடும் மக்களுக்கு ஆதரவு தரக்கோரி, சேலத்தில் அரசு மகளிர் கல்லூரி அருகே துண்டுப் பிரசுரம் விநியோ கித்த வளர்மதி(23) தற்போது குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர், சேலம் வீராணத்தை அடுத்த பள்ளிக்கூடத்தாதனூரை சேர்ந்த மாதையன்(53) கமலா(50) தம்பதி யரின் மகள். ஜீவானந்தம்(26), கதிர வன்(21) ஆகியோர் வளர்மதியின் சகோதரர்கள் ஆவர். இதில் ஜீவானந் தம் வீட்டிலேயே தறிப் பட்டறை வைத்துள்ளார். இளைய சகோ தரர் கதிரவன் ரேடியாலஜி படித்து விட்டு திருச்சியில் பணிபுரி கிறார்.

வளர்மதியின் பெற்றோர் மாதையன், கமலா.

பத்தாம் வகுப்பு வரை வீராணம் அருகே வலசையூரில் அரசு உயர் நிலைப் பள்ளியிலும், சேலம் சூரமங் கலம் அருகே செயின்ட் ஜோசப் பள்ளியில் மேல்நிலைக் கல்வி முடித்த வளர்மதி, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி (விவசாயம்) பட்டம் பெற்றார். தற் போது சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் இதழியல் முதலாம் ஆண்டு படிக்கிறார்.

போட்டிகளில் பரிசு வென்றவர்

வளர்மதி குறித்து அவரது தந்தை மாதையன் கூறியதாவது: என்னுடைய மகள் படிப்பில் படுசுட்டி. பள்ளி, கல்லூரிகளில் நடைபெற்ற பேச்சுப்போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை வென்று வந்தவர். பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்று, அப்போதைய வேளாண் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்திடம் பரிசு பெற்றார். பின்னர் காவல்துறை குறித்து சென்னையில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில் பங்கேற்று பரிசு வென்றார். அவருக்கு அப்போதைய சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் சுனில்குமார் சிங், பரிசு வழங்கி பாராட்டினார்.

துணிச்சலாக பேசக்கூடிய தைரி யம் கொண்டவர் வளர்மதி. சிதம் பரத்தில் அவர் படித்தபோது, கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதில் பிரச்சினை ஏற்பட்டது. அதில் மாண வர்களில் ஒருவராக போராடி கைதா னார். கல்லூரியில் விவசாயம் படித்தது முதல் இயற்கை விவசாயத் தைப் பற்றியும், விவசாயிகளின் சிரமங்கள் குறித்தும் அதிகமாக பேசுவார்.

கல்லூரி படிப்பை முடித்து விட்டு வந்த பின்னர் நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக விவசாயிகளும், பொதுமக் களும் போராடுவதைக் கண்டு வேதனையுடன் பேசி வந்தார்.

திருச்சியில் 1 மாதம் சிறை

நெடுவாசல் விவசாயிகளுக்கு ஆதரவாக தானும் போராடப் போவ தாகக் கூறினார். கோவையில் இருந்து நெடுவாசலுக்கு ரயிலில் சென்றபோது, போராட்டம் தொடர் பாக துண்டு பிரசுரம் விநியோகித்தார். அப்போது, குளித்தலை போலீஸாரால் கைது செய்யப்பட்டார். திருச்சி சிறையில் ஒரு மாதம் வரை இருந்த அவர், கடந்த மே மாதம் விடுவிக்கப் பட்டார்.

அதன் பின்னர் போலீஸார் எனது மகளைத் தேடி வீட்டுக்கு வந்தனர். அவர்களிடம் விவசாயிகளுக்கு ஆதரவாக போராடியது தவிர வேறு என்ன குற்றம் செய்தேன்? என்று வளர்மதி தைரியமாக கேட்டார். இந்த சம்பவத்தை அடுத்து நாங்களும் இதுபோன்ற போராட்டங்களுக்கு ஏன் செல்கிறாய்? என்று வளர்மதியிடம் கேட்டோம். ஆனால், விவசாயிகள் படும் வேதனையை அவர் எங்களிடம் எடுத்துக் கூறியபோது, வளர்மதியின் போராட்டத்தில் நியாயம் இருப்பதை உணர்ந்தோம்.

நக்சலைட் தொடர்பு கிடையாது

ஆனால், போலீஸார் கூறுவது போல, நக்சலைட் போன்றவர்களுடன் என் மகளுக்கு தொடர்பு கிடையாது. இதே ஊரைச் சேர்ந்த பழனிவேலு (நக்சலைட்) எங்களுக்கு தூரத்து உறவுமுறை. இதனால், நக்சலைட்டு களுடன் தொடர்பு என்று போலீஸார் கூறுகின்றனர். அரசுக்கு எதிராக வளர்மதி போராடவில்லை. விவசாயி களின் வாழ்வாதாரத்தை பறிக்கக் கூடாது என்றுதான் போராடுகிறார். இதற்காக, மாணவி என்றும் பாராமல் என் மகளை குண்டர் சட்டத்தில் கைது செய்திருப்பது, எங்களுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது என்று அவர் கூறினார்.

திருமணப் பேச்சு

வளர்மதிக்கு திருமணம் செய் வதற்கும் அவரது பெற்றோர் முடிவு செய்துள்ளனர். ஆனால், கல்லூரி படிப்பு முடித்தவுடன் திருமணம் குறித்து முடிவு செய்து கொள்ளலாம் என்று வளர்மதி மறுத்துள்ளார். இந்நிலையில் தான் சேலத்தில் கைது செய்யப்பட்டார்.

போராட்டங்களுக்கு ஆதரவாக துண்டுப் பிரசுரம் விநியோகித்தது, சாலை மறியல் உள்ளிட்ட புகார்களில் சிதம்பரம் அண்ணாமலை நகர், குளித்தலை, கோவை, சேலம் உள்ளிட்ட 6 இடங்களில் வளர்மதி மீது போலீஸில் வழக்குகள் உள்ளன. இந்த மொத்த வழக்குகளை அடிப்படையாக வைத்து வளர்மதி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

12 mins ago

தமிழகம்

22 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்