அரசு சித்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருந்து தட்டுப்பாடு: கருப்பு பேட்ஜ் அணிந்து மாணவர்கள் போராட்டம்

அரசு சித்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நிலவும் மருந்து தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சித்த மருத்துவ மாணவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து வகுப்புகளுக்கு சென்றனர். பயிற்சி டாக்டர்களும் கருப்பு பேட்ஜ் அணிந்து மருத்துவமனையில் பணியாற்றினர்.

அரும்பாக்கம் அரசு சித்த மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் உள்நோயாளிகளாக சுமார் 100 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். புறநோயாளிகளாக தினமும் 300-க்கும் மேற்பட்ட வர்கள் சிகிச்சை பெற்றுச் செல் கின்றனர். மருத்துவமனையில் மருந்து தட்டுப்பாடு நிலவுவதாக சித்த மருத்துவ மாணவ, மாணவி கள் மற்றும் பயிற்சி டாக்டர் கள் புகார் தெரிவித்து வந்தனர். ஆனால் மருத்துவமனை நிர்வாகம் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில், மருந்து தட்டுப் பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முதலாம் ஆண்டு முதல் 5-ம் ஆண்டு வரையுள்ள 250 மாணவ, மாணவி கள் கருப்பு பேட்ஜ் அணிந்து நேற்று வகுப்புகளுக்கு சென்றனர். இதே போல பயிற்சி டாக்டர்கள் 50 பேரும் கருப்பு பேட்ஜ் அணிந்து மருத்துவமனைகளுக்கு சென்றனர். இதுதொடர்பாக சித்த மருத்துவ மாணவர்கள் கூறிய தாவது: தமிழகத்தில் அலோபதி மருத்துவத்தால் (ஆங்கில மருத்துவம்) கட்டுப்படுத்த முடியாத டெங்கு காய்ச்சலை, சித்த மருத்துவமான நிலவேம்பு கசாயம், மலைவேம்பு கசாயம் கட்டுப் படுத்துகிறது. கடந்த 3 ஆண்டு களில் மட்டும் சித்த மருத்துவத் தின் மூலம் டெங்கு காய்ச் சலால் பாதிக்கப்பட்ட 50 ஆயிரத் துக்கும் மேற்பட்டோர் குணமடைந் துள்ளனர். இதனால் சித்த மருத்துவத்துக்கு பொதுமக்க ளிடையே நல்ல வரவேற்பு கிடைத் துள்ளது. அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சிகிச்சைக்கு வரும் அனைத்து நோயாளிகளுக்கும் சில குறிப்பிட்ட மருந்துகளை மட்டுமே கொடுக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை இழக்க வேண்டியிருக்கும். எனவே அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE