தென் மாவட்ட மக்களுக்கு நீதி வழங்கி வரும் உயர் நீதிமன்ற மதுரை கிளை 13 ஆண்டுகளை நிறைவு செய்து, இன்று 14-வது வயதில் அடியெடுத்து வைக்கிறது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் கிளை மதுரையில் அமைய வேண்டும் என்பது தென்மாவட்ட மக்களின் நீண்ட கால கனவு. இந்த கனவு நிறைவேறுவதற்காக தென்மாவட்ட வழக்கறிஞர்களும், பொதுமக்களும் பல ஆண்டுகளாக போராடி வந்தனர். இதனால் நாடு முழுவதும் உயர் நீதிமன்ற கிளைகள் அமைப்பது தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஜஸ்வத்சிங் தலைமையிலான ஆணையத்தை மத்திய அரசு அமைத்தது.
இந்த ஆணையம் கள ஆய்வு மேற்கொண்டு தென்மாவட்ட மக்கள் நீண்ட தூரத்தில் உள்ள சென்னை சென்று நீதி பெறுவதில் உள்ள சிரமத்தை போக்குவதற்காக மதுரை யில் உயர் நீதிமன்ற கிளை அமைக்க பரிந்துரை செய்தது. இதையடுத்து மதுரை உலகநேரியில் சென்னை உயர் நீதிமன்றத்தின் நிரந்தர கிளை அமைக்கப்பட்டது. 2004 ஜூலை 24-ம் தேதி முதல் செய்லபட தொடங்கியது.
நாட்டில் வேறு எங்கும் இவ்வளவு பிரம்மாண்டத்துடன் நீதிமன்ற கட்டிடம் இல்லை என்று சொல்லும் அளவுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை மிகவும் நேர்த்தியாகவும், முழுவதும் குளிர்சாதன வசதியுட னும் கட்டப்பட்டுள்ளது. வளாகம் முழுவதும் பல்வகை மரங்கள் சூழ்ந் திருப்பதால் நாட்டின் பசுமையான அமர்வு என உயர் நீதிமன்ற மதுரை கிளை அழைக்கப்படுகிறது. இங்கு வழக்கறிஞர்களாக பணிபுரிந்த எஸ்.நாகமுத்து, ஆர்.எஸ்.ராமநாதன் ஆகியோர் நீதிபதியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளனர். எஸ்.எஸ்.சுந்தர், ஜெ.நிஷாபானு, ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் நீதிபதியாக பணிபுரிந்து வரு கின்றனர்.
இதுவரை 13 மாவட்டங்களை சேர்ந்த லட்சக்கணக்கான வழக்கு களுக்கு தீர்வு அளித்துள்ள உயர் நீதிமன்ற கிளை இன்று 14-வது வயதில் அடியெடுத்து வைக்கிறது. கடந்த 13 ஆண்டு பயணத்தில் மாநில முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு களில் மட்டும் இல்லாமல், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு களிலும் முக்கிய தீர்ப்புகளை இந்நீதிமன்றம் வழங்கியுள்ளது. நீட் தேர்வுக்கு தடை, இறைச்சிக்காக மாடுகளை விற்க மத்திய அரசு தடை விதித்து பிறப்பித்த உத்தரவுக்கு தடை ஆகிய உத்தரவுகள் நாடு முழுவதும் பேசப்பட்டது.
உயர் நீதிமன்ற கிளையில் முதலில் விசாரிக்கப்பட்ட வழக்கு சிவகாசி ஜெயலெட்சுமி வழக்கா கும். அவரது தந்தை, தனது மகளை போலீஸார் கடத்தியதாக உயர் நீதி மன்ற கிளைக்கு தந்தி அனுப்பினார். அந்த தந்தியை ஆள்கொணர்வாக மாற்றி நீதிபதிகள் விசாரித்தனர். அதன் பிறகே ஜெயலெட்சுமியால் ஏட்டு முதல் எஸ்பி வரை குற்றம் சாட்டப்பட்டு சிபிஐ விசாரணை வரை சென்றது. எத்தனையோ வழக்குகளில் கண்டறிய முடியாத, கண்டறியப்படாத வழக்குகளில் போலீஸார் புலனாய்வு செய்து உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வருவதற்கு உயர் நீதிமன்ற கிளையின் உத்தரவுகள் முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
ஒத்தக்கடையில் அமைந்துள்ள ஒற்றைக்கல் யானைமலையை சிதைத்து சிற்பக்கலை நகரம் அமைக்கும் அரசாணையை ரத்து செய்து பாரம்பரியம் மிக்க யானைமலையை காப்பாற்றியது உயர் நீதிமன்ற கிளை உத்தரவு தான். தமிழர்களின் நாகரிகத்தை உலகுக்கு பறைசாற்றும் விதமாக இருந்துவரும் கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பழங்கால பொருட்களை காட்சிப்படுத்த கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க தமிழக அரசு 2 ஏக்கர் இடம் ஒதுக்க காரணமாக இருந்ததும் உயர் நீதிமன்ற கிளை உத்தரவு தான்.
இன்னும் பல ஆண்டுகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த பல தீர்ப்புகளை தர காத்திருக்கிறது இந்த உயர் நீதிமன்ற கிளை.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 mins ago
தமிழகம்
27 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago