திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த 1,074 பரப்புரையாளர்களை நியமிக்க முடிவு

By பெ.ஜேம்ஸ்குமார்

நகராட்சி, மாநகராட்சிகளில் திடக் கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த பரப்புரையாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

உள்ளாட்சி அமைப்புகளில் தினசரி சேகரமாகும் குப்பைகளை கையாளுவதில் பெரும் சிரமம் உள்ளது. இந்த குப்பைகளால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக் கப்படுகிறது. அதனால் உள்ளாட்சி அமைப்புகள் ஒன்றாக இணைந்து குப்பைகளில் இருந்து மின்சாரம், எரு, மண்புழு உரம் தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றன. இருப்பினும் இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படாமல் உள்ளது.

2016-ம் ஆண்டு திடக்கழிவு மேலாண்மை திட்டம் தொடர்பாக மத்திய அரசு சட்டம் இயற்றியுள்ளது. இந்த சட்டப்படி உணவகங்கள், விடுதிகள், வணிக நிறுவனங்கள், சாலையோரக் கடைகள் மற்றும் குடியிருப்புகளில் சேகரமாகும் குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும். மேலும் சாலையில் குப்பை கொட்டுபவர்கள், தரம் பிரித்து வழங்காதவர்களை சம்பந் தப்பட்ட உள்ளாட்சி தூய்மை காவ லர்கள் கண்காணித்து, அபராதம் விதிப்பார்கள்.

திடக்கழிவு மேலாண்மை திட் டத்தை சிறப்பாக நடைமுறைப் படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, 11 மாநகராட்சிகளிலும் (சென்னை நீங்கலாக), 124 நக ராட்சிகளிலும் திடக்கழிவு மேலாண்மை திட்டம் பற்றி பொது மக்களிடம் வீடு, வீடாகச் சென்று எடுத்து கூற ஏதுவாக பரப்புரை யாளர்களை நியமிக்க முடிவு செய் யப்பட்டுள்ளது. 4 வார்டுகளுக்கு ஒரு நபர் வீதமும், 5 பரப்புரை யாளர்களுக்கு, 1 மேற்பார்வை யாளர் நியமிக்கப்படவுள்ளனர். மொத்தம், 1,074 பேர் இந்த பணி களுக்காக நியமிக்கப்படவுள்ளனர். தனியார் நிறுவனங்கள் மூலம் ஒப்பந்த அடிப்படையில் இந்த பணிகள் மேற்கொள்ளப்படும்.

பரப்புரையாளர்களின் பணி

தினசரி சேரும் குப்பைகளில், மக்கும் குப்பைகளை பச்சை நிற கூடையிலும், மக்காத குப்பைகளை நீல நிற கூடையிலும் உள்ளாட்சி பணியாளர்களிடம் வழங்க வேண் டும். சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் சாதக பாதகங்கள் குறித்தும், 2016 திடக்கழிவு மேலாண்மை சட்டம் குறித்தும், திறந்த வெளியில் மலம் கழிக்காதிருத்தல், பிளாஸ்டிக் பயன்பாட்டினை தவிர்த்தல் உள் ளிட்ட சுகாதாரம் குறித்து அனைத்து விளக்கங்களையும் இவர்கள் வீடு, வீடாகச் சென்று பொதுமக்களிடம் விளக்குவார்கள்.

மத்திய அரசு 60 சதவீதம்

இது குறித்து சுகாதார அலுவலர் ஒருவர் கூறும்போது, “2016 திடக்கழிவு மேலாண்மை திட்டம் மற்றும் பிளாஸ்டிக் மேலாண்மை திட்டத்தை நடைமுறைப்படுத்த, மத்திய, மாநில அரசுகள் முடிவு செய்து பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதன் ஒரு பகுதி யாக இந்த திட்டத்தை செயல் படுத்த பரப்புரையாளர்கள் நியமிக் கப்படவுள்ளனர். இந்த திட்டத்துக்கு மத்திய அரசு 60 சதவீதமும், மாநில அரசு 40 சதவீதமும் நிதி வழங்கு கிறது. பரப்புரையாளர்கள், 12ம் வகுப்பும், மேற்பார்வையாளர்கள் இளங்கலை படிப்பில் சோசியாலஜி பிரிவு படித்திருக்க வேண்டும். இதன் மூலம், 1,074 பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

17 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்