காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ கட்சியிலிருந்து நீக்கம்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.வான எம்.ராஜசேகரனை கட்சியிலிருந்தும் அவர் வகித்த பொறுப்புகளிலிருந்தும் நீக்கி யுள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அறிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டம் தொட்டியம் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் எம்.ராஜசேகரன். திருச்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவ ராகவும் பொறுப்பு வகித்து வந்தார். கடந்த மக்களவை தேர்தலில் பெரம் பலூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார்.

காங்கிரஸிலிருந்து விலகி புதுக் கட்சி தொடங்கியுள்ள ஜி.கே.வாச னின் ஆதரவாளராக, வலம் வந்து கொண்டிருக்கும் ராஜசேகரனை காங்கிரஸ் தலைமை கட்சியிலி ருந்தும் அவர் வகித்த திருச்சி வடக்கு மாவட்ட தலைவர் பதவியி லிருந்தும் நீக்கியுள்ளது. மேலும் இதே போல் செயல்பட்டு வரும் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட காங் கிரஸ் கமிட்டி தலைவராக இருந்து வந்த எஸ்.டி.நெடுஞ்செழியனை யும் காங்கிரஸிலிருந்து நீக்கி அக் கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

இது தொடர்பாக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நேற்று வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ள தாவது: திருச்சி வடக்கு மாவட்ட தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ. வுமான எம்.ராஜசேகரனையும், காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தலைவர் எஸ்.டி.நெடுஞ்செழியனை யும் கட்சியின் அடிப்படை உறுப்பி னர் முதல் அனைத்து பொறுப் புகளிலிருந்தும் நீக்கியுள்ளோம். ராஜசேகரன் வகித்த திருச்சி வடக்கு மாவட்ட தலைவர் பொறுப்பை, திருச்சி மாநகர் மாவட்ட தலைவராக உள்ள ஜெரோம் ஆரோக்கியசாமி கவனிப்பார். மேலும், காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தலைவராக தாம்பரம் நகராட்சி மன்ற உறுப் பினர் வி.ஆர்.சிவராமன் நியமிக்கப் பட்டுள்ளார். புதிய நிர்வாகிகளுக்கு காங்கிரஸ் தொண்டர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE