மாநிலம் முழுவதும் மதுவிலக்கு சட்டத்தில் ஒரு லட்சம் பேர் கைது: கூடுதல் இயக்குநர் தகவல்

மதுவிலக்கு குற்றங்கள் தொடர் பாக மாநிலம் முழுவதும் சுமார் ஒரு லட்சம் பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, மது விலக்கு பிரிவு கூடுதல் இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், கள்ளச்சாராயம் காய்ச்சுதல், விற்பனை செய்வதை தடுப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மதுவிலக்கு அமல்பிரிவு கூடுதல் இயக்குநர் முனைவர் காந்திராஜன் தலைமை யில் நேற்று நடை பெற்றது.

இதில், கூடுதல் இயக்குநர் பேசியதாவது: ‘காஞ்சிபுரம் மாவட்டம் வழியாக எரிசாராயம், போலி மதுபானங்கள், பிற மாநில மதுபானங்கள் ஆகியவை சட்டவிரோதமாக தமிழ்நாட்டுக் குள் கடத்தப்படுவதை தடுக்க மாவட்ட போலீஸார் தீவிரமாக செயல்பட வேண்டும்.

இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

மாநிலம் முழுவதும் மதுவிலக்கு தொடர்பாக போலீஸார் மேற்கொண்ட நடவடிக்கையின் மூலம் 8,445 பெண்கள் உட்பட 1,01,198 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சட்ட விரோதமாக கடத்தி வரப்பட்ட ரூ.9.9 கோடி மதிப்பிலான மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன’ என்றார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில், மாவட்ட எஸ்.பி. விஜயகுமார், சென்னை மண்டல அமலாக்கப்பிரிவு கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா, காஞ்சிபுரம் மாவட்ட கூடுதல் எஸ்.பி. சண்முகம், மத்திய புலனாய்வுப் பிரிவு கண்காணிப்பாளர் மதி, மாவட்ட டாஸ்மாக் மேலாளர் ரங்கன் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE