சட்டரீதியாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் காவிரியில் தமிழகத்தின் உரிமைகளை மீட்டெடுத்தவர் மோகனகிருஷ்ணன்

By டி.செல்வகுமார்

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்குகளில் சர்வதேச சட்டங்கள், இந்திய சட்டங்களுக்கு உட்பட்டு, தொழில் நுட்ப ரீதியாகப் போராடி தமிழகத்தின் உரிமைகளை மீட்டெடுத்ததில் முக்கியப் பங்கு வகித்தவர் மறைந்த பொறியாளர் ஏ.மோகனகிருஷ்ணன் (வயது 91).

சென்னையில் அண்மையில் கால மான மோகனகிருஷ்ணன், திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தில் பிறந்து சென்னையில் படித்து தமிழக பொதுப்பணித் துறையில் உதவி செயற்பொறியாளர் பதவியில் இருந்து தலைமைப் பொறியாளர் பதவி வரை பல்வேறு பொறுப்புகளை வகித்தார். காவிரி நதிநீர் பங்கீட்டில் தமிழகத்தின் உரிமைகளை மீட்டெடுத்ததில் முக்கியப் பங்குவகித்தவர். பொதுப் பணித் துறையில் 1948-ம் ஆண்டு பணியில் சேர்ந்த அவர், 1984-ல் ஓய்வுபெற்றார். அதன்பிறகு காவிரி தொழில்நுட்பக் குழு தலைவராகவும், அரசு ஆலோசகராகவும் 85 வயது வரை திறம்பட பணியாற்றினார்.

கீழ்பவானி, அமராவதி, சாத்தனூர், கிருஷ்ணகிரி ஆகிய நீர்த்தேக்கத் திட்டங்கள், திண்டுக்கல் காமராஜர் சாகர் (இதிலிருந்துதான் திண்டுக்கல்லுக்கு குடிநீர் விநியோகம்), பாலாறு அணைக் கட்டு மேம்பாட்டுத் திட்டம், பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம் போன்ற திட்டங்களில் பணிபுரிந்து அத்திட்டங்களைச் செயலாக் கம் செய்ததில் முக்கியப் பங்குவகித்தார்.

1975-ம் ஆண்டு முதல் ஆந்திராவில் இருந்து சென்னைக்கு குடிநீர் கொண்டு வரும் திட்டமான தெலுங்கு கங்கை திட்டம் உருவாகக் காரணமாக இருந்தார். 1990-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரை காவிரி தொழில்நுட்பக் குழு தலைவராக இருந்து நீதிமன்றங்களில் போராடி தமிழகத்தின் உரிமைகளை மீட்டெடுத்தார். 2000-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரை தமிழக நீர்வளம் தொடர்பாக அனைத்துத் திட்டங்களுக்கும் அரசு ஆலோசகராக இருந்து அவை செயல்படக் காரணமாக இருந்தார்.

தமிழக பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளராக, காவிரி தொழில்நுட்பக் குழுத் தலைவராக, அரசு ஆலோசகராகவும் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரிடம் பணி யாற்றியுள்ளார். மறைந்த முதல்வர் காமராஜர் ஆட்சிக்காலத்தில் உதவிப் பொறியாளர், உதவி செயற்பொறியாளர், செயற்பொறியாளராகப் பணியாற்றி, மேற்கண்ட நீர்த்தேக்கத் திட்டங்கள் உருவாகக் காரணமாக இருந்தார்.

அவருடன் தனக்கு ஏற்பட்ட அனுபவங் களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார் தமிழ்நாடு காவிரி நீர்ப்பாசன விவசாயிகள் நல உரிமைப் பாதுகாப்பு சங்கப் பொதுச் செயலாளர் எஸ்.ரங்கநாதன்.

200 ஆண்டு ஆவணங்கள்

‘‘காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்குகளை மோகனகிருஷ்ணன் புரிந்துகொண்ட அளவுக்கு யாரும் புரிந்து கொள்ளவில்லை. காவிரி தொடர் பான 200 ஆண்டுகள் ஆவணங்களை அவர் வைத்திருந்தார். கடந்த 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நாம் காவி ரியைப் பயன்படுத்தி வருகிறோம். இவ் வாறு தொன்றுதொட்டு நாம் உபயோ கித்து வரும் தண்ணீரின் அளவைக் குறைக்கக்கூடாது. என்று 1924-ம் ஆண்டு சட்டம் கூறுகிறது. அதைக் கொடுத்து விட்டுத்தான் மீதமுள்ள நீரைப் பங்கீடு செய்வது குறித்து பேச்சு நடத்த வேண் டும்.

நதிநீர் பங்கீடு

பின்னர், நதிநீர் தொடர்பாக ஹெல்சிங்கில் என்ற இடத்தில் நடந்த சர்வதேச மாநாட்டில் மக்கள் தொகை, பரப்பளவு, பயிரின் தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் நதிநீர் பங்கீடு செய்யப்பட வேண்டும் என்றும் அதன்படியே சர்வதேச சட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. அந்த தீர்மானத்தின் அடிப்படையில் காவிரி நதிநீர் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடந்தது.

அந்த நேரத்தில், 1924-ம் ஆண்டு சட்டம் காலாவதியாகிவிட்டது. அதன்படி தமிழ்நாடு தண்ணீர் கோரக்கூடாது என்று கர்நாடகம் கூறியது. அதுகுறித்து வல்லுநர்களுடன் பேசி அந்த சட்டம் செல்லும் என்று நிலை நிறுத்தியது பொறியாளர் மோகனகிருஷ்ணன்தான். அவரது அணுகுமுறையில் கர்நாடக அதிகாரிகளுடன் பிரச்சினை இல்லை’’ என்றார் ரங்கநாதன்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

மேலும்