‘கிணறு பிரச்சினையில் ஓ. பன்னீர்செல்வம் நம்பவைத்து ஏமாற்றி விட்டார்’ லெட்சுமிபுரத்தில் தினந்தோறும் போராட்டம்: கிராம கமிட்டி கூட்டத்தில் பொதுமக்கள் முடிவு

By பி.டி.ரவிச்சந்திரன்

பேச்சுவார்த்தையில் உறுதி அளித்தபடி நடந்துகொள்ளாமல் நம்பவைத்து ஏமாற்றியதாக, முன் னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல் வத்தை கண்டித்து தினம், தினம் போராட்டம் நடத்த லெட்சுமிபுரம் கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர்.

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ளது லெட்சுமிபுரம் ஊராட்சி. இங்கு குடிநீர் ஆதாரமாக உள்ள கிணறு அருகே, முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமிக்கு சொந்த மான நிலம் உள்ளது. இந்த நிலத் தில் மெகா கிணறு வெட்டப்பட்ட தால், ஊராட்சியின் நீர் ஆதாரம் முற்றிலும் குறைந்தது. இதனால் கிணற்றை தங்களுக்கு வழங்க வேண்டும் என்று கோரி, கிராம மக்கள் போராட்டங்களை நடத்தி னர். இந்நிலையில், ஓ. பன்னீர் செல்வம் பங்கேற்ற பேச்சுவார்த் தையில் 90 நாட்களுக்கு கிணற்றில் இருந்து தண்ணீர் தருவது என்றும், அதற்குள் கிணறு உட்பட நிலத்தை கிராம மக்களே வாங்கிக் கொள்ள வேண்டும் என்றும், இல்லாவிட்டால் வேறு நபருக்கு விற்று விடுவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து ரூ.6 கோடி மதிப்புள்ள நிலத்தை வாங்க கிராம மக்கள் முடிவு செய்தனர். இந்நிலையில், பேச்சுவார்த்தைக்கு முதல்நாளே கிணறு உள்ள நிலம் ஓ.பன்னீர்செல்வத்தின் நண்பர் சுப்புராஜ் என்பவருக்கு விற்கப்பட் டது தெரியவந்தது. இதையடுத்து, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து நேற்று முன்தினம் இரவு நடந்த கூட்டத்தில், நிலத்தை கிராமத் துக்கு விற்பனை செய்வதா கக் கூறி ஏமாற்றிவிட்ட ஓ.பன் னீர்செல்வத்தை கண்டித்து தின மும் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து லெட்சுமிபுரம் முன்னாள் ஊராட்சித் தலைவர் ஜெயபாலன் ‘தி இந்து’ செய்தி யாளரிடம் கூறியதாவது: ஓ.பன்னீர் செல்வம் பேச்சுவார்த்தையின் போது கூறியபடி, கிணறு மற்றும் நிலத்தை ஊர்மக்கள் சேர்ந்து வாங்க முடிவு செய்தோம். நிலத்தை வாங்க நாங்கள் ஏற்பாடுகள் செய்துவந்த நிலையில், அவர் நிலத்தை வேறு ஒருவருக்கு விற்றது அதிர்ச்சி அளிக்கிறது. பேச்சுவார்த்தையில் ஒப்புக் கொண்டதுபோல ஓ.பன்னீர்செல் வம் நிலத்தை கிராம மக்களுக்கு தர வேண்டும். நிலத்துக்கான விலையை கொடுக்க நாங்கள் தயாராக உள்ளோம். அவர் சொன்ன வார்த்தையைக் காப் பாற்றவேண்டும். அதுவரை தொடர்ந்து போராட கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர். இன்று காலை 9 மணி முதல் 12 மணி வரை ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். நாளை(ஜூலை 27) முதல் பந்தல் அமைத்து உண்ணாவிரதப் போராட்டம் மற்றும் தினமும் ஒரு போராட்டம் நடத்த உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். ஜெயபாலன்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

11 mins ago

தமிழகம்

33 mins ago

தமிழகம்

25 mins ago

தமிழகம்

44 mins ago

தமிழகம்

37 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

20 hours ago

மேலும்