விவசாயிகள் தற்கொலையைத் தடுப்பதுதான் உங்கள் வேலை; நிவாரணங்களை விநியோகிப்பது அல்ல: தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

By கிருஷ்ணதாஸ் ராஜகோபால்

விவசாயிகள் தற்கொலைகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதே உங்கள் பணி, தற்கொலைகளுக்குப் பிறகு நிவாரண விநியோகம் செய்வதல்ல என்று தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

அரசின் ‘உண்மையான பணி’ விவசாயிகள் தற்கொலைக்கான அடிப்படைக் காரணங்களை கண்டுபிடித்து தீர்வு காண்பதே என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தீபக் மிஸ்ரா, ஏ.எம்.கான்வில்கர் ஆகிய நீதிபதிகள் அடங்கிய அமர்வு, அரசைப் பிரதிநிதித்துவம் செய்யும் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நரசிம்மாவிடம் கூறும்போது, “உங்கள் அணுகுமுறை தடுக்கும் நோக்கம் கொண்டதாக இருக்க வேண்டுமே தவிர, நிவாரணத்தை நோக்கியதாக இருப்பதல்ல” என்பதைச் சுட்டிக்காட்டினர்.

மேலும், “வேளாண் கடன் விவகாரத்தில் வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு நெருக்கடி ஏற்படும் போது மாநில அரசு தலையிடுவது அவசியம்” என்று நீதிபதி மிஸ்ரா தெளிவு படுத்தினார்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக வாதாடிய வழக்கறிஞர் ஆர்.ராஜாராமன் கூறும்போது தற்கொலைகளுக்குப் பின்னால் விவசாயிகளின் கவுரவ இழப்பு உள்ளது என்றார்.

“வேளாண் கடன்களை விவசாயிகள் திருப்பிச் செலுத்த முடியாத போது வங்கிகள் பலவந்தமான சில நடவடிக்கைகளை எடுக்கின்றன. இது அவர்களது கவுரவத்துக்கு இழுக்கு ஏற்படுத்துகிறது, அவமானகரமாக உணர்கின்றனர். இவர்கள் சிறு விவசாயிகளாக இருக்கும் போது, தங்கள் உயிர்களை மாய்த்துக் கொள்கின்றனர்” என்றார்.

இந்த வாதத்தை வழிமொழிந்த நீதிமன்றத்தின் நம்பிக்கை அறிவுரையாளரும் வழக்கறிஞருமான கோபால் சங்கர நாராயணன், “பயிர்கள் சேதமடையும் போது, விளைச்சல் தோல்வியடையும் போது வங்கிகள் விவசாயிகளின் டிராக்டர்களை பறிமுதல் செய்கின்றனர், இது பலவந்தமான ஒரு நடைமுறைதான்” என்றார்.

இதற்கு நீதிபதி கான்வில்கர், “இப்படி துயரத்தில் சிக்கிக் கொள்ளும் விவசாயி வங்கிகளின் நடவடிக்கைகளுக்கு எதிராக நிர்வாகத்தை அணுக முடியுமா? அப்படி அவர் செய்யத்தான் முடியுமா?, அப்படி அணுக முடியுமெனில் அது விவசாயிகளுக்கு தெரியப்படுத்தப்பட வேண்டியது அவசியம்” என்றார்.

நீதிமன்ற அறிவுரையாளர் சங்கரநாராயணன், பிரதமர் ஃபசல் பீமா யோஜனா, இதனை தமிழ்நாடு அரசு மிகவும் உதவிகரமானது என்று கூறுகிறது, என்பது நல்ல நோக்கத்துடன் செயல்படுத்தப்பட வேண்டிய ஒன்று. ஆனால் விவசாயிகளுக்கு இத்தகைய திட்டங்கள் தெரிவதில்லை. ஏனெனில் இது கடைகோடி விவசாயியை இணைக்கவில்லை என்றார்.

இதனையடுத்து நீதிபதி மிஸ்ரா, “ஆகவே நீங்கள் எப்படி இடைத்தரகர்களை அகற்ற முடியும்? உதாரணமாக தமிழகத்தில் பயிர் விளைகிறது என்றால், அவர்களுக்காக மாநில அரசு விற்று, குறைந்தபட்ச ஆதார விலை அவர்களுக்குக் கிடைப்பதை உறுதி செய்வது அவசியம். இடைத்தரகர்களிடமிருந்து எந்த ஒரு கட்டாயப்படுத்தலையும் தவிர்க்க இந்த நடைமுறை அவசியம்” என்று சுட்டிக்காட்டினார்.

முன்னதாக விவசாயிகள் தற்கொலைக்கு உடல்நலக் கோளாறு, சொந்தப் பிரச்சினைகளே காரணம் என்று தமிழக அரசு கூறியதற்கு உச்ச நீதிமன்றம் கடுமையாக விமர்சனத்தை முன் வைத்தது. அப்போது, “விவசாயிகளின் துயரம், எந்த ஒரு உணர்வுபூர்வமான ஆன்மாவையும் தொந்தரவுக்குள்ளாக்கும்” என்று கூறியது.

ஆனால் தமிழக அரசு, “தாங்கள் எப்போதுமே விவசாயிகள் துயரத்திற்கு உணர்வுபூர்வமாக இருப்பதாகவும், முதல்வர் நிவாரண நிதியிலிருந்து தற்கொலை செய்து கொண்ட 82 விவசாயக் குடும்பங்களுக்கு ரூ.2.46 கோடி நிவாரணம் வழங்கப்பட்டதாகவும் கூறியது. அதாவது ஒவ்வொரு குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டதாகத் தெரிவித்தது.

மேலும் வழக்கறிஞர் யோகேஷ் கண்ணா மூலம் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில் தமிழக அரசு, “2012 வறட்சியின் போது தமிழக அரசு ரூ.1377 கோடி நிவாரணம் வழங்கியது. அதேபோல் 2015-16 வெள்ளத்தின் போது, தமிழக அரசு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்காக ரூ.407.57 கோடி நிவாரணம் வழங்கியது.” என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் 3,48,323 விவசாயிகளுக்கு ரூ.1840.79 கோடித் தொகையைக் கடனாக பணமதிப்பு நீக்கம் காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டதாகவும், பயிர்க்கடனாக 7,62,772 விவசாயிகளுக்கு ரூ.4227.98 கோடி அளிக்கப்பட்டதாகவும் நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்