சிலிண்டர் விலை உயர்வு: முதல்வர் கண்டனம்

By செய்திப்பிரிவு

முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை:

அண்மையில் நடந்த மாநில சட்டமன்றத் தேர்தல்களில் விலைவாசி உயர்விற்கு எதிராக மக்கள் வாக்களித்துள்ள நிலையில் சமையல் எரிவாயு சிலிண்டருக்கான விநியோகத் தொகையை 3 ரூபாய் 46 காசு ஏற்றி இருப்பது, பழிக்குப் பழி என்ற எண்ணத்தில் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு செயல்படுவது போல் அமைந்துள்ளது.

மாதாமாதம் டீசல் விலையையும், பெட்ரோல் விலையையும் ஏற்றி விலைவாசி உயர்வுக்கு வழிவகுத்த மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு தற்போது ஏழை, எளிய தாய்மார்களின் வயிற்றிலும் அடித்துள்ளது. மத்திய அரசின் இந்தச் செயல் கடும் கண்டனத்திற்குரியது.

முகவர்களுக்கு வழங்கப்படும் கமிஷன் உயர்த்தப்பட்டுள்ளதே விலை உயர்வுக்கு காரணம் என்று தெரிவித்தாலும், இதனை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். உயர்த்தப்பட்ட முகவர் கமிஷனை மத்திய அரசே ஏற்றுக் கொள்வதுதான் நியாயமானது.

விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெறுவதோடு, இதன் விலையை மேலும் குறைப்பதற்கான வழி வகைகளை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்