தனிச் சின்னம் கோரி புதிய தமிழகம், மமக வழக்கு

By செய்திப்பிரிவு

நாடாளுமன்றத் தேர்தலில் தங்கள் கட்சிக்கு தனிச் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி புதிய தமிழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கே.கிருஷ்ணசாமி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘தங்கள் கட்சிக்கு தொலைக்காட்சிப் பெட்டி சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்’ என கோரியுள்ளார்.

இதேபோல் மனிதநேய மக்கள் கட்சிக்கு மெழுகுவர்த்தி சின்னம் ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி அக்கட்சியின் தலைவர் ஜே.எஸ்.ரிஃபாயி தனியாக மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுக்கள் நீதிபதிகள் என்.பால் வசந்தகுமார், எம்.சத்தியநாராயணன் ஆகியோரைக் கொண்ட அமர்வில் வெள்ளிக்கிழமை தனித் தனியாக விசாரணைக்கு வந்தது. அப்போது இது தொடர்பாக தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், இரு மனுக்கள் மீதான விசாரணையை வரும் செவ்வாய்க்கிழமைக்கு ஒத்தி வைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

மேலும்