பள்ளிக் கல்வியின் தரத்தை உயர்த்துவதற்கான சீர்திருத்தங்கள்: ஆசிரியர்களின் ஒத்துழைப்போடு செயல்படுத்த திட்டம்

By வி.தேவதாசன்

தமிழக பள்ளிக் கல்வித் துறையில் பல சீர்திருத்தங்களை கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆசிரியர்களின் கருத்துகள், ஆலோசனைகளை பெற்று அவர்களின் முழு ஒத்துழைப்போடு இந்த சீர்திருத்தங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டு வருகிறது.

அரசுப் பள்ளி ஆய்வக உதவியாளர் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை, சர்ச்சைகளுக்கு இடம் தராத வகையில் ஆசிரியர்கள் பதவி உயர்வு மற்றும் இடமாறுதலுக்கான கலந்தாய்வு என தமிழக பள்ளிக் கல்வித் துறையில் அண்மைக் காலத்தில் நடைபெறும் பல ஆரோக்கியமான நிகழ்வுகள் பரவலான பாராட்டுதல்களைப் பெற்றுள்ளன.

குறிப்பாக பள்ளிக் கல்வியின் தரத்தை மேம்படுத்துவது தொடர்பாக பல்வேறு தரப்பினருடன் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், துறையின் அரசு செயலாளர் த.உதயச்சந் திரன் ஆகியோர் மேற்கொண்டு வரும் பல கட்ட ஆலோசனைகள் பரவலான கவனத் தைப் பெற்றுள்ளன. பள்ளிக் கல்வியில் மாற்றம் வேண்டி நீண்ட காலமாக செயல்பட்டு வரும் கல்வியாளர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், பத்திரிகை யாளர்கள், வகுப்பறையில் மாறுபட்ட போதனை முறைகள் மூலம் மாணவர் களையும், பள்ளியையும் மேம்படுத்தி யுள்ள குறிப்பிட்ட சில ஆசிரியர்கள் என பல்வேறு நபர்களை அரசு செயலாளர் தொடர்ந்து சந்தித்து வருகிறார். தற் போதைய காலத்தின் தேவைக்கேற்ப என்னென்ன மாற்றங்கள் செய்யலாம் என்பது பற்றிய அவர்களின் கருத்து களை கேட்டறிகிறார்.

இந்த வரிசையில் மே 2-ம் தேதி நடை பெற்ற ஒரு ஆலோசனைக் கூட்டம் சமீபத்திய ஆண்டுகளில் இல்லாத குறிப்பிடத்தக்க ஒரு நிகழ்வாக ஆசிரியர்கள் மத்தியில் பேசப்படுகிறது. தமிழ்நாட்டில் செயல்படும் 63 ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகளை ஒரே இடத்தில் கூட்டி, 12 மணி நேரத்துக்கும் மேலாக அவர்களின் கருத்துகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், துறையின் உயர் அதிகாரிகள் கேட்டிருக்கிறார்கள். முதல் நாள் பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி அடுத்த நாள் அதிகாலை 2 மணிக்கு மேல் நீடித்த இந்த ஆலோசனைக் கூட்டம், மிக முக்கிய நிகழ்வாக தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆசிரியர்களால் பார்க்கப்படுகிறது.

அடுத்தடுத்து நடைபெறும் இது போன்ற ஆலோசனைக் கூட்டங்கள் மற்றும் கல்வித் துறையில் மேற்கொள்ள திட்டமிட்டுள்ள சீர்திருத்தங்கள் தொடர் பாக பள்ளிக் கல்வித் துறையின் உயர் அதிகாரிகள் சிலரிடம் பேசியபோது, அவர்கள் கூறியதாவது:

நமது பள்ளிக் கல்வித் துறையில் பல சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண் டிய ஒரு முக்கியமான காலகட்டத்தில் இருக்கிறோம். தேசிய அளவிலும், சர்வ தேச அளவிலும் நடைபெறும் பல்வேறு போட்டித் தேர்வுகளை அதிக அளவில் நம்மூர் மாணவர்கள் எதிர்கொள்ள வேண் டிய நிலை உருவாகியுள்ளது. அந்த தேர்வுகளை எதிர்கொள்ள கூடிய வகை யில் நமது மாணவர்களை தயார்படுத்த வேண்டுமானால், அதற்கேற்ப பாடத் திட்டத்தையும் மாற்றியாக வேண்டும்.

வெறும் மனப்பாடமும், மதிப்பெண் களும் மட்டுமே கல்வி அல்ல. அதையெல் லாம் விட மனித வாழ்வியலின் மிக உயர்ந்த பல மதிப்பீடுகளை நமது மாணவர் களுக்கு கற்றுக் கொடுக்கும் இடம் பள்ளி வகுப்பறைகள்தான். அதற்கேற்ற வகையில் வகுப்பறை சூழலில், பாடத் திட்டத்தில், போதனை முறைகளில் பல மாற்றங்களை செய்ய வேண்டியுள்ளது. இது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவே, பல் வேறு தரப்பினரின் கருத்துகள் கேட்கப் பட்டு வருகின்றன.

இதுபோன்ற சீர்திருத்தங்களை, மாற் றங்களை செயல்படுத்த வேண்டிய இடத் தில் இருப்பவர்கள் ஆசிரியர்கள்தான். அந்த ஆசிரியர்கள் மகிழ்ச்சியாக, முழு ஈடுபாட்டோடு இந்த சீர்திருத்தங்களை ஏற்று, செயல்படுத்தினால்தான் நமது நோக்கம் வெற்றி பெறும். ஆகவே, ஆசிரியர்களின் முக்கியமான பல பிரச்சினைகளுக்கு முதலில் தீர்வு காண முடிவு செய்துள்ளோம். அவர்களின் பிரச்சினைகள், கோரிக்கைகள் பற்றி அறியவே 63 சங்கங்களின் பிரதிநிதிகளை ஒரே இடத்தில் கூட்டி பேசினோம்.

ஊதிய முரண்பாடுகள் மற்றும் ஊதிய பலன்களில் நிலவும் குறைபாடுகளை களைய வேண்டும் என்பது ஆசிரியர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. புதிய ஊதியக் குழு பரிந்துரைகள் தொடர்பாக ஆராய அமைக்கப்பட்டுள்ள குழு மூலம் இதுபோன்ற பல பிரச் சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என நம்புகிறோம். ஆசிரியர்களின் மேலும் பல கோரிக்கைகள் தொடர்பாக சட்டப் பேரவையில் மானியக் கோரிக்கையின் போது அறிவிப்புகள் வெளியாகும்.

உடனடியாக தீர்க்கக் கூடிய சில கோரிக்கைகள் ஏற்கப்பட்டு, கடந்த மூன்று தினங்களில் அரசாணைகளும் வெளியிடப்பட்டுள்ளன. இன்னும் பல அரசாணைகள் வெளிவரும்.

இவ்வாறு கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கல்வித் துறை அமைச்சரும், அதிகாரி களும் மேற்கொண்டுள்ள இத்தகைய முயற்சிகள் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழ்நாட்டில் அறிவொளி இயக் கத்தை செயல்படுத்துவதிலும், சமச்சீர் கல்வி உள்ளிட்ட முக்கிய கல்வித் திட்டங்களின் உருவாக்கத்திலும் முக்கிய பங்காற்றிய பேராசிரியர் ச.மாடசாமி இதுபற்றி கூறியதாவது:

வகுப்பறைகளில் மாற்றம் கொண்டு வர வேண்டி பல ஆண்டுகளாக உழைத்து வரும் முன்மாதிரியான பல ஆசிரியர்களும், கல்வித் துறையின் அதிகாரிகளும் தங்கள் முயற்சிகளுக்கு பெரும் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக கருதுகின்றனர். கல்வித் துறையின் மாவட்ட அளவிலான அதிகாரிகளுக்கு கடந்த 3 நாட்களாக மதுரையில் பயிலரங்கம் நடைபெற்றது. என்னைப் போன்ற கல்வியாளர்கள், எஸ்.ராம கிருஷ்ணன், சு.வெங்கடேசன் போன்ற எழுத்தாளர்கள், மருத்துவர் கு.சிவராமன் போன்ற சமூக செயல்பாட்டாளர்கள் என பல்வேறு தரப்பினர் அந்த அதிகாரிகள் முன் பேச அழைக்கப்பட்டனர்.

இத்தகைய பன்முகப் பார்வையோடு கூடிய பயிற்சியை, கல்வித் துறை அதிகாரிகளுக்கு அளிப்பது என்பது இதுவரை பார்த்திராதது. இதுபோன்ற பல முயற்சிகள் நமது கல்வித் துறை குறித்து பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மாணவர்கள் விரும்பி கற்கக் கூடிய வகையில் பாடங்களும், பாடத் திட்டமும், போதனை முறைகளும், வகுப்பறை சூழலும் மாற வேண்டும் என்பதே கல்வி சார்ந்த சமூக ஆர்வலர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பு. அத்தகைய மாற்றம் விரைவிலேயே வரும் என்பதற்கான அறிகுறிகள் தெரியத் தொடங்கியுள்ளன.

வெறும் மனப்பாடமும், மதிப்பெண்களும் மட்டுமே கல்வி அல்ல. அதையெல்லாம் விட மனித வாழ்வியலின் மிக உயர்ந்த பல மதிப்பீடுகளை நமது மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கும் இடம் பள்ளி வகுப்பறைகள்தான். அதற்கேற்ற வகையில் வகுப்பறை சூழலில், பாடத் திட்டத்தில், போதனை முறைகளில் பல மாற்றங்களை செய்ய வேண்டியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

26 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்