தமிழகத்தில் இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை 1.50 கோடியை கடந்தது

By எஸ்.சசிதரன்

தமிழகத்தில் இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை ஒன்றரை கோடியை எட்டியுள்ளது. சென்னையில் மட்டும் சுமார் 25 சதவீதம், அதாவது, 40 லட்சம் வாகனங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன. போக்குவரத்துத் துறை பதிவேடு களின்படி, இந்த ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி வரை, தமிழகத்தில் 1 கோடியே 81 லட்சத்து 91 ஆயிரத்து 474 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கடந்த 2012-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி வரை தமிழகத்தில் வாகனங்களின் எண்ணிக்கை 1 கோடியே 63 லட்சத்து 69 ஆயிரத்து 248 ஆக இருந்தது. ஒரே ஆண்டில், சுமார் 18 லட்சம் வாகனங்கள் கூடுதலாக வாங்கப்பட்டுள்ளன. இதற்கு முந்தைய ஆண்டில், 14.50 லட்சம் வாகனங்களே அதிகமாக வாங்கப்பட்டன.

2 கோடியை எட்டும்

வாகனங்களை புதிதாக வாங்கும் ஆர்வம் அதிகரித்து வருவதைப் பார்த்தால், வரும் ஆண்டில் வாகனங்களின் எண்ணிக்கை 2 கோடியைத் தொட்டாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.

இரு சக்கர வாகனங்களுக்கு அடுத்தபடியாக, கார்களின் எண் ணிக்கைதான் அதிகமாக உள்ளது. தமிழகத்தில் இயங்கி வரும் கார்களின் எண்ணிக்கை, 16 லட்சமாக உயர்ந்துள்ளது. இதேபோல் ஆட்டோக்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 20 ஆயிரத்து 440 ஆக அதி கரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது 2.32 லட்சம் லாரிகள் இயங்குகின்றன.

டூ வீலர் 90 சதவீதம்

தமிழகத்தில் தற்போது இயங்கி வரும் மொத்த வாகனங்களின் எண்ணிக்கையில், 90 சதவீதம் இருசக்கர வாகனங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தம் உள்ள 1 கோடியே 81 லட்சத்து 91 ஆயிரத்து 474 வாகனங்களில், இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை, 1 கோடியே 50 லட்சத்து 63 ஆயிரத்து 633 ஆக உள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் 1-ம் தேதி நிலவரப்படி, தமிழகத்தில் 1 கோடியே 35 லட்சத்து 28 ஆயிரத்து 631 இரு சக்கர வாகனங்கள் இருந்தன. அதாவது, ஒரே ஆண்டில் 15 லட்சம் இருசக்கர வாகனங்கள் புதிதாக பதிவாகியுள்ளன.

சென்னையில் 40 லட்சம்

தமிழகத்தில் இயங்கும் மொத்த வாகனங்களில் சுமார் 25 சதவீத வாகனங்கள் சென்னையில் இயங்கி வருகின்றன. சென்னையில் ஓடும் மொத்த வாகனங்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு நவம்பர் 1-ம் தேதி நிலவரப்படி, 37.6 லட்சமாகவும், இந்த ஆண்டு ஏப்ரல் தொடக்கத்தில், 38.8 லட்சமாக அதிகரித்தது. அது, இந்த ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி நிலவரப்படி, 40 லட்சத்து 75 ஆயிரத்து 756 ஆக உயர்ந்திருக்கிறது. சென்னையில் மட்டுமே சுமார் 3 லட்சத்து 15 ஆயிரம் வாகனங்கள் சாலையில் கூடுதலாக ஓடத் தொடங்கியுள்ளன.

சென்னையில் மொத்தம் வாக னங்களின் எண்ணிக்கையில், இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை மட்டுமே 31 லட்சத்து 97 ஆயிரத்து 986 ஆக உள்ளது.

தீர்வுதான் என்ன ?

தமிழகத்தில் கடந்த 20 ஆண்டு களில் மட்டும் வாகனங்களின் எண்ணிக்கை 750 சதவீதம் அதி கரித்துள்ளது. மக்களின் தேவைக்கு ஏற்ப பஸ், ரயில் போன்ற பொதுவான போக்குவரத்துச் சேவைகள் அதிகரிக்காததே வாகனங்களின் எண்ணிக்கை, அதிகரித்திருப்பதற்கு முக்கிய காரணம் என்று சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தமிழகத்தில் இன்னமும் சில ஊர் களுக்கு பஸ் வசதியே இல்லாதது, பல ஊர்களுக்கு போதிய பஸ்கள் இல்லாதது ஆகிய காரணங்களால் பொதுப் போக்குவரத்தை விடுத்து, சொந்த வாகனங்களின் பக்கம் மக்கள் கவனத்தைத் திருப்பி வரு கின்றனர்.

சென்னையில் பல்வேறு பகுதி களிலிருந்து முக்கியப் பகுதி களுக்குச் செல்ல பொதுவான போக்குவரத்து வசதி இன்னமும் கிடைக்கவில்லை. இதுதவிர இங்குள்ள மக்கள் தொகைக்கேற்ப இன்னமும் 2 ஆயிரம் பஸ்களாவது தேவை என்கிறார் அந்த அதிகாரி.

மெட்ரோ, மோனோ ரயில் திட்டங்களை விரைவாக செயல் படுத்தி, அந்த நிலையங்களை அடைவதற்கு உரிய வசதிகளை செய்து தந்தால், இப்பிரச்சினைக்கு பெரிய தீர்வாக அமையும் என்பதே போக்குவரத்து வல்லுநர்களின் கருத்து. இந்த திட்டங்களை மற்ற பெரிய நகரங்களுக்கும் விரிவுபடுத்தி, மினி பஸ்களின் எண்ணிக்கையை மாநிலத்தில் அனைத்து உட்புறப் பகுதிகளுக்கும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் சாலைகளில் நெரிசல் குறையும், விபத்து உயிரிழப்புகளும் தடுக்கப்படும் என்று அவர்கள் கூறு கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்