புலிகள் இயக்கத்தினர் அரசியல் கட்சி தொடக்கம்: இலங்கைத் தமிழர் மறுவாழ்வுக்கு வழிவகுக்கும் - தலைவர்கள், விமர்சகர்கள் வரவேற்பு

By எம்.மணிகண்டன்

இலங்கையில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளி கள் இணைந்து புதிய அரசியல் கட்சி தொடங்கியிருப்பதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர் கள், விமர்சகர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் நாடாளுமன்ற தேர்தல் வரும் ஆகஸ்ட் 17-ம் தேதி நடக்கவுள்ள நிலையில், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் இலங் கையில் நேற்று முன்தினம் ஒன்று கூடி ஆலோசனைக் கூட்டம் நடத் தினர். இதில், ‘ஜனநாயக போராளி கள் கட்சி’ என்ற பெயரில் புதிய அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்தனர்.

இதை தமிழக மற்றும் இலங்கை யைச் சார்ந்த அரசியல் தலை வர்கள், விமர்சகர்கள் வரவேற் றுள்ளனர். இதுதொடர்பாக ‘தி இந்து’விடம் அவர்கள் கூறியதாவது:

இலங்கை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன்:

முன்னாள் போராளிகள் ஜனநாயக அரசியலுக்கு வரு வதை வரவேற்கிறோம். புதிய அரசியல் கட்சி தொடங்கியிருப்பது நம்பிக்கை அளிக்கிறது. தமிழ்த் தேசிய கூட்டமைப்போடு இணைந்து செயல்படுவோம் என்று அவர்கள் கூறியுள்ளனர். இதுதொடர்பாக அவர்களிடம் இருந்து எந்த கோரிக்கையும் எங்களுக்கு வரவில்லை. கோரிக் கைகள் வந்த பிறகு, எங்கள் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டத்தில் உரிய முடிவு எடுப் போம்.

தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன்:

புதிதாக கட்சி தொடங்கியிருப்பவர்களின் பின்னணி குறித்து எனக்கு தெரிய வில்லை. எனினும், சிறிசேனா, சந்திரிகா குமாரதுங்கா, ராஜபக்ச என சிங்களர்கள் அனைவரும் ஒன்றாக இணைகின்றனர். இந்த சூழலில் தமிழர்களும் ஒன்றி ணைய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. முன்னாள் போராளி கள் மட்டுமின்றி, தமிழர்கள் எல்லோரும் ஒற்றுமையுடன் இணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும். அப்போதுதான், தமிழர்கள் இல்லாமல் சிங்க ளர்கள் ஆட்சி அதிகாரத்தை பெற முடியாது என்கிற நிலை உரு வாகும். அதன் மூலம்தான் இலங் கையில் தமிழர்களுக்கு மறுவாழ்வு கிடைக்கும்.

புலம்பெயர்ந்த இலங்கை எழுத்தாளர் ஷோபா சக்தி:

பிரபாகரன் ஜனநாயக ரீதியான அரசியலை முன்னெடுக்க வேண்டும் என்று தான் நாங்கள் எல்லாம் விரும்பினோம் ஜன நாயகத் தன்மை இல்லாத தால்தான் அந்த இயக்கம் பலவீனம் அடைந்தது. இந்நிலையில் புலிகள் இயக்க முன்னாள் போராளிகள் சிலரது முயற்சியில் ஜனநாயக ரீதியான அரசியல் இயக்கம் உரு வாகியுள்ளது என்ற செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது. இது வரவேற்கத் தக்கது. அந்த அரசியல் இயக்கத் தின் செயல்பாடுகள் மற்றும் அதன் வெற்றி எவ்வாறு அமையும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான்:

தந்தை செல்வா ஜன நாயக அரசியலைதான் முன்னெடுத் தார். அகிம்சை வழியில் போராடி யவர்கள் ஆயுத தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டனர். அதன் விளை வாகவே தமிழர்கள் கையில் ஆயுதங்கள் திணிக்கப்பட்டன. இன்றைக்கு இலங்கையில் தமி ழர்கள் பெருமளவில் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சூழலில் ஜனநாயகவழிப் போராட்டம்தான் தமிழர்களின் விடியலுக்கான கடைசி அஸ்திரம். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் புதிய கட்சி தொடங்கியிருப்பது வரவேற் கத்தக்கது.

எந்த அரசியல் அதிகாரம் தமிழர் களை அழித்ததோ, அந்த அதிகாரத்தை பெற்று சிறப்புடன் வாழ ஜனநாயக போராட்டம் முக்கியமானது. இயக்கம் தொடங்கிவிட்டு அவர் துரோகி, இவர் துரோகி என்று குறை கூறாமல், அதை சரியாக முன்னெடுத்தால் மகிழ்ச்சியே.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுதொடர்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோவிடம் கேட்டபோது, ‘‘புதிய இயக்கம் தொடர்பான தகவல் எதுவும் எனக்கு தெரியாது’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

52 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்