முதல்வர் பன்னீர்செல்வம் தொடர்ந்து மவுனமாகவே இருந்தால் எப்படி?- ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கேள்வி

தமிழக முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் மக்கள் பிரச்சினைகளில் தொடர்ந்து மவுனமாகவே இருந்தால் எப்படி? என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங் கோவன் கேள்வியெழுப்பியுள்ளார்.

சத்தியமூர்த்தி பவனில் நேற்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நிருபர்களிடம் கூறியதாவது:

தஞ்சை, திருவாரூர், நாகப் பட்டினம் மாவட்ட விவசாயிகள் வருகிற 28-ம் தேதி நடத்தும் கடையடைப்பு, ரயில், பேருந்து நிறுத்த போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி முழு ஆதரவு அளிக்கும். அதுமட்டுமன்றி, அவர்களுடன் சேர்ந்து காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டத்திலும் ஈடுபடுவார்கள்.

தருமபுரி சுகாதார நிலையத்தில் தொடர்ச்சியாக 11 குழந்தைகள் மரணமடைந்துள்ளன. இதற்கு முறையான சிகிச்சை அளிக்காதது தான் காரணம். இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை தீவிரமாக கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். முல்லைப் பெரியாறு அணையில் கேரள எம்.எல்.ஏ. பிஜுமோல், மற்றும் சிலர் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இது கண்டிக் கத்தக்கது. எனவே, தமிழக அரசு தொழிற்சாலை பாதுகாப்பு படையை அணையில் பாதுகாப்புக்காக நிறுத்த வேண்டும்.

பால் விலையுயர்வு மற்றும் கலப்படம் போன்ற குற்றச்சாட்டுக் கள் உள்ளன. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கும் சரியாக இல்லை. பாஜக அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இப்படி மக்கள் பிரச்சினையில் முதல்வரே பன்னீர்செல்வம் எத்தனை நாள் தான் மவுனமாக இருப்பார். முதல்வர் இப்படி மவுனமாக இருந்தால் எப்படி? எங்களைவிட்டு பிரிந்து போனவர்கள் அவர்கள் பாதையில் போகிறார்கள்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சக்கரபாணி ரெட்டியாரின் கார் கண்ணாடியை வாசன் ஆதரவாளர்கள் உடைத்துள் ளார்கள். இப்படி வன்முறையில் ஈடுபட்டால், நாங்கள் அதை திருப்பி செய்ய வேண்டியிருக்கும்.

வாசன் வன்முறையில் நம்பிக்கையில்லாதவர், இது மாதிரியான சம்பவங்கள் நடக்கா மல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE