மதுரை மாநகராட்சி கவுன்சிலர் வேட்பாளர்களை தேர்வு செய்வது யார்?- செல்லூர் ராஜூ- ராஜன்செல்லப்பா இடையே கடும் போட்டி

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை மாநகராட்சி கவுன்சிலர் வேட்பாளர்களில் தங்கள் ஆதரவாளர்களை அதிகளவில் நிறுத்திவிட வேண்டும் என்பதில் அமைச்சர் செல்லூர் ராஜூ, முன்னாள் மேயர் ராஜன் செல்லப்பா இடையே ஏற்பட்டுள்ள கடும் போட்டி அதிமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மாநகராட்சியில் 72 வார்டுகள் இருந்தன. புறநகர் பகுதிகள் இணைந்தபின் 100 வார்டுகளாக உயர்ந்தது. இதில் எத்தனை வார்டுகள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதில் திமுக, அதிமுக என இரு கட்சிகளிலுமே அதிகார போட்டி தொடர்கிறது.

தற்போது, மாநகர் செயலா ளரான அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கட்டுப்பாட்டில் 76 வார்டுகளும், புறநகர் மாவட்ட செயலாளரான வி.வி.ராஜன்செல்லப்பா கட்டுப்பாட்டில் 24 வார்டுகளும் உள்ளன. அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் புறநகரில் கவனம் செலுத்துகிறார். ராஜன் செல்லப்பா புறநகர் மாவட்ட செயலாளராக இருந்தபோதும் மாநகருக்கு உட்பட்ட வடக்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பி னராக உள்ளார்.

ஏற்கெனவே மேயராக இருந் தவர் என்பதால் நகர் நிர்வாகி களில் இவரது ஆதரவாளர்களும் உள்ளனர். ஓராண்டாகத் தான் புறநகர் மாவட்டத்தில் கவனம் செலுத்துகிறார். செல்லூர் ராஜூ, ராஜன் செல்லப்பா ஆகியோரிடையே கவுன்சிலர் வேட்பாளர்களை தேர்வு செய் வதில் கடும் போட்டி நிலவுகிறது.

புறநகரிலுள்ள 24 வார்டுகளில் மட்டுமே ராஜன் செல்லப்பா தலையிட வேண்டும் என்றும், மேற்குத் தொகுதி தான் வென்ற தொகுதி என்பதால் இங்குள்ள 2 வார்டுகள், பரவை பேரூராட்சி, 3 கிராமப் பஞ்சாயத்துக்கள் தனது கட்டுப்பாட்டில்தான் இருக்கும் என செல்லூர் ராஜூ தெரிவித்துவிட்டார். இதை ஏற்றால், தான் வெற்றி பெற்ற வடக்கு தொகுதி யிலுள்ள 18 வார்டுகளில் நான்தான் வேட்பாளர்களை பரிந்துரைப்பேன் என ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார். இதை செல்லூர்ராஜூ ஏற்க வில்லை. இதில், இருவருக்கு மிடையே கடும் அதிகார போட்டி நீடிக்கிறது.

இது குறித்து அதிமுக பிரமுகர் ஒருவர் கூறுகையில், ‘ இருவரும் ஆளுக்கொரு காரணத்தைக் கூறி அதிக கவுன்சிலர்களை தங்கள் ஆதரவாளர்களாக்க திட்டமிடுகின்றனர். மாநகரில் கட்சி முழுமையாக தனது கட்டுப்பாட்டில் மட்டுமே இருக்க வேண்டும் என்பதில் செல்லூர் ராஜூ உறுதியாக உள்ளார். இதனால் கட்சி மேலிடத்திற்கு இப்பிரச்சினையை கொண்டு சென்று, 76 வார்டுகளில் வேட்பா ளர்களை தேர்வு செய்யும் அதிகாரத்தை பெற்றுவிட்டார். இதில் ராஜன்செல்லப்பாவிற்கு ஏமாற்றமே என்றாலும், மேயர் பதவியை எப்படியாவது தனது ஆதரவாளருக்கு பெற்று தந்துவிட வேண்டும் என்பதில் தீவிரம் காட்டி வருகிறார்.

நகருக்குள் தனது ஆதரவாளருக்கு சீட் பெற்றுத்தர முடியாமல் ராஜன்செல்லப்பாவும், புறநகரில் உள்ள 24 வார்டுகளில் தனது ஆதரவாளர்களை நிறுத்த முடியாமல் செல்லூர் ராஜூவும் தவிக்கின்றனர். இந்த குழப்பத்தை பயன்படுத்தி சீட் பெற இடையிலுள்ள சிலர் காய் நகர்த்தி வருகின்றனர். இருவரிடம் நிலவும் போட்டி அதிமுகவினரிடையே பரபரப்பை அதிகரித்துள்ளது.

அமைச்சர்களால் திணறிய அதிகாரிகள்

இது குறித்து அதிகாரி ஒருவர் கூறியது: உள்ளாட்சி தேர்தலுக்கு கட்சியினரை தயார் படுத்தும் பணியில் அமைச்சர்கள் உதயகுமார், செல்லூர் ராஜூ ஆகியோர் கடந்த ஒருவாரமாக தீவிரம் காட்டி வருகின்றனர். இதற்காக மதுரையிலேயே தங்கியிருந்தால், இடைப்பட்ட நேரங்களில் நலத்திட்ட உதவி, வட்டாட்சியர் அலுவலக ஆய்வு, சமுதாய வளைகாப்பு, விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கல் என 15-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.

புறநகரில் உதயகுமாருடன் ராஜன் செல்லப்பாவும், நகரில் செல்லூர் ராஜூம், சில இடங்களில் இவர்கள் 3 பேர் சேர்ந்தும் பங்கேற்றனர். மாநகரிலும், புறநகரிலும் தங்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைத்தான் சிறப்பாக செய்ய வேண்டும், இது தொடர்பான செய்திகள் பெரிய அளவில் வெளியாக வேண்டும் என்பதில் இரு அமைச்சர்கள் அதிக கெடுபிடி காட்டியதால் அதிகாரிகள் திணறிவிட்டனர். மேலும், உள்ளாட்சி தேர்தலுக்கு முன்னதாக தாங்கள் சிபாரிசு செய்த காரியங்களை உடனே செய்து தர வேண்டும் என இரு அமைச்சர்கள் தரப்பிலும் கடும் நெருக்கடி தரப்பட்டது. இதில், மாநகர், புறநகர் என எதை முதலில் செய்து முடிப்பது என்பதில் அதிகாரிகள் தவித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

தமிழகம்

11 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்