மியாட் மருத்துவமனையில் சர்வதேச மாநாடு

சென்னை மியாட் மருத்துவ மனையில் வயிற்றுச்சுவர் புற்று நோய்க்கு ஹாட் கீமோதெரப்பி சிகிச்சை குறித்த இரண்டு நாள் சர்வதேச மாநாடு நேற்று தொடங்கியது.

இந்தோ - பிரிட்டிஷ் ஹெல்த் இனிஷியேட்டிவ் (ஐபிஎச்ஐ) சார்பில் வயிற்றுச்சுவர் (பெரிடோ னியம்) புற்றுநோய்க்கு ஹாட் கீமோதெரப்பி சிகிச்சை குறித்த இரண்டு நாள் சர்வதேச மாநாடு, சென்னை மணப்பாக்கம் மியாட் மருத்துவமனையில் நேற்று தொடங்கியது. ஐபிஎச்ஐ நிறுவன செயலரும், மியாட் மருத்துவமனை நிர்வாக இயக்குநருமான டாக்டர் பிரித்வி மோகன்தாஸ் தலைமை வகித்தார்.

இந்த மாநாட்டில் டாக்டர் பிரித்வி மோகன்தாஸ் பேசிய தாவது: வயிற்றுச்சுவர் புற்று நோய் பாதிக்கப்பட்டவர்களில் 95 சதவீதம் பேர் இறக்கின்றனர். ஹாட் கீமோதெரப்பி சிகிச்சையின் மூலம் இறப்பை 25 சதவீதம் குறைக்கலாம். இந்த சிகிச்சை முறை, வயிற்றுச்சுவர் புற்று நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு, புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி யுள்ளது. இந்த சிகிச்சை மியாட் மருத்துவமனை உட்பட உலக அளவில் 30 மையங்களில் மட்டுமே அளிக்கப்படுகிறது.

மியாட் மருத்துவமனை நிறுவனர் மற்றும் ஆலோசகர் மோகன்தாஸ், மருத்துவமனை தலைவர் மல்லிகா மோகன்தாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE