பதவி உயர்வுபெற்ற இடங்களுக்கு செல்லாத 110 மருத்துவர்கள்: அரசு மருத்துவமனைகளில் ‘மாற்றுப் பணி’ பெயரில் விதி மீறல்

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

தமிழகத்தில் பதவி உயர்வுடன் பணி யிட மாற்றம் பெற்ற இடங்களுக்கு செல்லாமல், ஏற்கெனவே பணி புரிந்த மருத்துவமனைகளிலேயே ‘மாற்றுப் பணி’ என்ற பெயரில் 110 மருத்துவர்கள் விதிமுறைகளை மீறி பணிபுரிந்து வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அரசு மருத்துவக் கல்லூரி களில் பணிபுரியும் உதவிப் பேராசிரி யர்கள், இணைப் பேராசிரியர்கள், மாவட்ட அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு, அவர்களுடைய தகுதி மற்றும் பணி மூப்பு அடிப்படையில் இடமாறுதலு டன் கூடிய பதவி உயர்வுகள் வழங் கப்படுகின்றன. இணைப் பேராசிரி யர்கள், பேராசிரியர்கள் மற்றும் மூத்த குடிமையியல் மருத்துவராக பதவி உயர்வு பெற்று, வேறு மாவட்டத்துக்கு செல்லும் இவர்கள் ஒருசில மாதங்களிலேயே அரசியல் சிபாரிசு, உயர் அதிகாரிகளின் தயவோடு ‘மாற்றுப் பணி’ (deputation) என்ற பெயரில், மீண்டும் தாங்கள் முன்பு பணிபுரிந்த மருத்துவக் கல்லூரிகள், மாவட்ட மருத்துவமனைகளுக்கே வந்துவிடுகின்றனர்.

‘மாற்றுப் பணி’ என்பது குறிப் பிட்ட காலம் மட்டுமே பணிபுரிவதற் கான உத்தரவு. ஆனால், இவர் கள் மாற்றுப் பணியில் ஆண்டுக் கணக்கில், நிரந்தரமாக பணிபுரிந்து வருகின்றனர். பதவி உயர்வை மட்டும் விரும்பும் மருத்துவர்கள், தங்களு டைய வீடு, கிளினிக் உள்ளிட்ட வசதிகளுக்காக, வெளியூர்களில் பணிபுரியத் தயாராக இருப்பதில்லை. அதனால், இவர்கள் பதவி உயர்வுடன் பணியிட மாற்றம் செய்யப்பட்ட வேறு மாவட்ட அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகளில் நோயா ளிகள், மாணவர்கள் பாதிக்கப்படு வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து மதுரையைச் சேர்ந்த சமூகச் செயற்பாட்டாளர் சி.ஆனந்தராஜ் கூறும்போது, ‘‘பதவி உயர்வுபெற்ற மருத்துவர்கள் தாங்கள் இடமாற்றம் செய்யப்பட்ட மருத்துவமனைகளுக்குச் செல்ல மறுப்பதால் அந்த மருத்துவமனை களில் முக்கியத்துவம் வாய்ந்த நோய்ப் பிரிவு துறைகளுக்கு அனுபவம் மிக்க மருத்துவர்கள் இல்லாமல் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். தமிழகம் முழுவதும் இதுபோல பதவி உயர்வு பெற்ற 110 மருத்துவர்கள் ‘மாற்றுப் பணி’ என்ற பெயரில், விதிமுறைகளை மீறி பல்வேறு மருத்துவமனைகளில் பணியாற்றி வருகின்றனர்.

சென்னை அரசு மருத்துவமனை களில் மட்டும் பணியிட மாற்றத் துடன் பதவி உயர்வு பெற்ற 25 மருத்துவர்கள், மாற்றுப் பணியில் பணிபுரிகின்றனர். மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் இதுபோல மாற்றுப் பணியில் 5 மருத்துவர்கள் விதிமுறைகளை மீறி பணிபுரிகின் றனர். இவர்கள் பதவி உயர்வு பெற்று ஊதியம் பெறுவது ஒரு மருத்துவமனையாகவும், பணி செய்வது இன்னொரு மருத்துவ மனையாகவும் இருக்கிறது. அரசி யல் செல்வாக்கு, உயர் அதிகாரி கள் சிபாரிசில் இவர்கள் வந்துள்ள தால், மருத்துவமனை உயர் அதி காரிகளும் இவர்களைக் கண்டு கொள்வதில்லை. இதனால் தூத் துக்குடி, தேனி, கோவை, தஞ்சாவூர் உள்ளிட்ட அரசு மருத்துவக் கல் லூரி மருத்துவமனைகளில் சிறப்பு சிகிச்சை நிபுணர் இல்லாத நிலை ஏற்படுவதால் நோயாளிகள் பலர், அந்த சிறப்பு நிபுணர் எங்கு பணிபுரிகிறாரோ அந்தந்த மருத்துவமனைக்குப் பரிந்துரை செய்யப்படும் நிலை உள்ளது. இதனால் ஏழை நோயாளிகள் கடும் அலைக்கழிப்புக்கும், பொரு ளாதார இழப்புக்கும் ஆளாகின் றனர்.

இதனால், மருத்துவமனை களில் நிர்வாக சீர்கேடு ஏற்பட்டுள் ளது. மாநில சுகாதாரத்துறை அதி காரிகள் இதுதொடர்பாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

பணிபுரியும் இடத்திலேயே பதவி உயர்வு

இதுகுறித்து மருத்துவர்கள் வட்டாரத்தில் விசாரித்தபோது, “மருத்துவர்களை பொறுத்தவரையில் பணி அனுபவத்தைப் பொறுத்தே ஊதிய உயர்வு அதிகரிக்கும். பதவி உயர்வால் அதிகபட்சம் 5 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே ஊதிய உயர்வு கிடைக்கிறது. இந்த ஊதிய உயர்வுக்காக பணிபுரியும் மாவட்டத்தின் மருத்துவப் பணி அனுபவத்தை விட்டு, குடும்பத்தோடு மற்ற மாவட்டங்களுக்கு செல்வது சிரமம். பணிச் சூழல் மற்றும் குடும்ப அளவில், பொருளாதார அளவில் மிகப்பெரிய ஏற்ற, தாழ்வுகளை சந்திக்க நேரிடும். அதனால், பதவி உயர்வால் நோயாளிகள், மருத்துவர்கள் பாதிக்கப்படுவதை தடுக்க பதவி உயர்வுகளை பணிபுரியும் இடத்திலேயே வழங்க வேண்டும்” என்றனர்.

இதுகுறித்து மருத்துவத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “மருத்துவப் பணிகள் பாதிக்காத வகையில்தான் எல்லா ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன. இந்த விவகாரம் அரசு அளவில் ஆலோசிக்க வேண்டிய விஷயம்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

52 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்