உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக் கப்படும் முன்பே தேர்தலில் போட்டியிட முடிவு செய்திருப்பவர்கள் வாக்காளர்களை கவருவதற்காக அவர்களுக்கு பல்வேறு பரிசுப் பொருட்களை வழங்கி வருகின்றனர்.
தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, நெல்லை உட்பட 12 மாநகராட்சிகள், 125 நகராட்சிகள், 529 டவுன் பஞ்சா யத்துகள், 12,524 ஊராட்சிகள் உள்ளன. இந்த உள்ளாட்சி அமைப் புகளில் மேயர்கள், நகராட்சித் தலைவர்கள், டவுன் பஞ்சாயத்து, ஊராட்சி தலைவர்கள், வார்டு கவுன்சிலர்கள், ஊராட்சி உறுப் பினர்கள் என மொத்தம் 1,32,458 பதவிகள் உள்ளன.
தமிழகத்தில் கடந்த 2011-ல் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பத விக் காலம் அடுத்த மாதத்துடன் நிறைவடைகிறது.
இதனால் அக்டோபர் மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடத்த தமிழக அரசு முடிவு செய்து, தேர்தலுக்காக ரூ.183.24 கோடி ஒது க்கீடு செய்துள்ளது. தமிழகத்தில் மேயர், நகராட்சித் தலைவர், டவுன் பஞ்சாயத்து தலைவர்கள் நேரடியாக தேர்வு செய்யப்பட்டு வந்த முறை ரத்து செய்யப்பட்டு கவுன்சிலர்கள் மூலம் தேர்வு செய்ய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் கவுன்சிலர்களாக தேர்வு செய்யப்படுவோருக்கு மேயர், நகராட்சித் தலைவர், டவுன் பஞ்சா யத்து தலைவர் தேர்தலில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும். எனவே வரும் உள்ளாட்சித் தேர்தலில் கவுன்சிலர் சீட் பெற கடும் போட்டி உருவாகி உள்ளது.
உள்ளாட்சித் தேர்தல் தேதி இதுவரை முறைப்படி அறிவிக்க படவில்லை. இருப்பினும் ஏற்கெனவே உள்ளாட்சிகளில் பதவியில் இருப்பவர்களும், புதிதாக தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களும் வாக்காளர் களைக் கவருவதற்கான வேலை களில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
தற்போது பதவியில் இருப் பவர்கள் தாங்கள் இதுவரை செய்த சாதனைகளை பட்டியலிட்டு பிரச்சாரத்தை தொடங்கிவிட்டனர். இதேபோல் அதிமுக, திமுக உள்ளி ட்ட கட்சிகள் சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் தேர்தலில் நிற்க சீட் கிடைக்குமா?, கிடைக்காதா? என காத்திருக்காமல் பிரச்சாரத்துக்கு புறப்பட்டுவிட்டனர். தற்போது பதவியில் இருப்பவர்கள், கடந்த தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர்கள், புதிதாக போட்டியிட நினைப்பவர்கள் வாக்காளர்களுக்குப் பரிசுப் பொருட்களை கொடுத்து கவர்ந்து வருகின்றனர்.
முதல்கட்டமாக ஒவ்வொ ருவரும் ஆண் வாக்கா ளர்களுக்கு வேட்டி, பெண் வாக்கா ளர்களுக்கு சேலை வழங்குகின்றனர். தேர்தல் தேதி அறிவிக்கப் பட்டதும் மற்றொரு பரிசும், தேர்தல் நெருங்கும் நேரத்தில் இன்னொரு பரிசும் தரப்படும் என உறுதியளித்து வாக்குகளை சேகரிக்கின்றனர். பெரும்பாலான இடங்களில்முதல் கட்டப் பரிசுப் பொருட்கள் விநியோகம் முடிந்து விட்டது.
பரிசுப் பொருட்கள் காலை நேரத்தில் சம்பந்தப்பட்ட பகுதி களுக்கு கொண்டுசெல்லப்படு கிறது. அப்பகுதியில் உள்ள தெரிந்தவர்கள் முன்னிலையில் வாக்காளர்கள் அடையாளம் காணப்பட்டு பரிசுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன.
இவ்வாறு வழங்கும்போது யாருக்கு கொடுக் கப்பட்டது என்பதை தனி நோட்டில் குறித்து வைத்துக்கொள்கின்றனர்.
பொதுமக்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டை களை காண்பித்தால் பரிசுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. அப்போது, கண்டிப்பாக தனக்கு வாக்களிக்க வேண்டும், பரிசுப் பொருட்களை வாங்கிவிட்டு வாக்களிக்காமல் போனால் நாங் கள் கண்டுபிடித்துவிடுவோம், எங்களிடம் இருந்து தப்ப முடி யாது என செல்ல மிரட்டலும் விடுக்கின்றனர். தேர்தல் அறிவிப்பு வெளியாகும் முன்பே பரிசுகள் குவிந்து வருவதால் வாக்காளர்கள் மகிழ்ச்சியில் மூழ்கி உள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
26 mins ago
தமிழகம்
43 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
12 hours ago