சென்னை மாநகராட்சியின் தலைமையிடமான ரிப்பன் மாளிகை வளாகத்தில் அமைக்கப்பட்டு வரும், புதிய 6 மாடி இணைப்பு கட்டிடத்தின் பணி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. வரும் ஏப்ரல் மாதத்தில் கட்டுமான பணி முழுமை பெறும் என மாநகராட்சி வட்டாரத்தினர் கூறுகின்றனர்.
சென்னை மாநகராட்சியின் தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகை மற்றும் அதன் வளாகப் பகுதியில் உள்ள அலுவலகங்களில் நீடிக்கும் இடநெருக்கடியை தவிர்க்கவும், ரிப்பன் மாளிகையின் ஒரு தளத்தில் ரிப்பன் மாளிகை மற்றும் சென்னை மாநகராட்சி தொடர்பான அருங்காட்சியகம் அமைக்கவும் புதிய இணைப்புக் கட்டிடத்தை அமைக்க மாநகராட்சியில் முடிவெடுக்கப்பட்டது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது:
சென்னை மாநகராட்சியின் தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகையின் புதிய இணைப்புக் கட்டிடம், மாளிகையின் பின்புறத்தில் , 1.50 லட்சம் சதுர அடி பரப்பில் ரூ.33 கோடியில் அமைகிறது.இந்தப்பணி கடந்த 2009-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
இது, தரை தளம் மற்றும் 6 தளங்கள் கொண்டதாக அமைக்கப்பட்டு வருகிறது. இதில் 4 லிப்டுகள் இயங்கும். தரைத் தளத்தில் 40 கார்களும், 100 இரு சக்கர வாகனங்களும் நிறுத்தலாம்.
மாநகராட்சியில் முப்பதுக்கும் மேற்பட்ட துறைகள் உள்ளன. அவற்றில், இட நெருக்கடி காரணமாக ரிப்பன் கட்டிட வளாகத்துக்கு வெளியே பெரியமேடு, சாமி தெருவில் தேர்தல் துறை இயங்குகிறது.
இட நெருக்கடி இருப்பதால் மின் துறை ரிப்பன் கட்டிடத்திலும் ரிப்பன் கட்டிட வளாகத்திலுமாக இயங்குகிறது. இது போல உள்ள சிறுசேமிப்பு துறை, சுகாதாரத் துறை உள்ளிட்ட 18 துறைகள் செயல்படுவதற்கான அலுவலகங்கள் புதிய கட்டிடத்தில் ஒதுக்கப்பட்டுள்ளன.மேலும் ஒரு சிறு கலையரங்கமும், கலந்தாய்வுக் கூடமும் புதிய கட்டிடத்தில் அமைக்கப்பட்டுள்ளன.
இப்பணிகளில் தற்போது 80 சதவீதப் பணிகள் முடிவடைந்து, இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளோம். முன் பகுதி மற்றும் உள் அலங்காரம் அமைப்பது உள்ளிட்ட 20 சதவீதப் பணிகள் மட்டுமே இன்னும் உள்ளது.
இந்தப் பணிகள் யாவும் நிறைவடைந்து, வரும் ஏப்ரல் மாதத்தில் புதிய இணைப்பு கட்டிடத்தின் கட்டுமான பணி முழுமை பெறும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago