சிறுபான்மை ஆணையத் தலைவர் மீது தேர்தல் விதிமுறை மீறல் குற்றச்சாட்டு :ஈரோடு ஆட்சியரிடம் பாஜக புகார்

By செய்திப்பிரிவு

ஈரோடு தேர்தல் விதிமுறைகளுக்கு மாறாக சிறுபான்மை ஆணையத் தலைவர் அதிமுக.வின் வெற்றிக்காக பிரார்த்தனை நடத்தியுள்ளதாக பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது.

இதுகுறித்து ஈரோடு தெற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் பொன். ராஜேஸ்குமார், மாநில பிரச்சார அணித் தலைவர் சரவணன் ஆகியோர் மாவட்டத் தேர்தல் அதிகாரியும், ஆட்சியருமான சண்முகத்திடம் வெள்ளிக்கிழமை அளித்த மனு விவரம்:

ஈரோடு சி.எஸ்.ஐ. பிரப் ஹாலில் நடந்த நிகழ்ச்சியில், மாநில சிறுபான்மை ஆணையத் தலைவர் பிரகாஷ், கிறிஸ்தவ மத போதகர்கள் 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற ஜெபிக்குமாறு மத போதகர்களைக் கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தோப்பு வெங்கடாசலம், தாமோதரன் மற்றும் ஈரோடு மாநகராட்சி துணை மேயர் பழனிச்சாமி, மொடக்குறிச்சி எம்.எல்.ஏ. கிட்டுசாமி ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். இதில் பங்கேற்ற சிறுபான்மை ஆணையத் தலைவர் பிரகாஷ் ஜெபிக்க, உடன் மத போதகர்களும் பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர்.

சிறுபான்மை ஆணையம் என்பது தமிழக அரசின் சட்டப்பூர் வமான அமைப்பாகும். தமிழகத் தில் உள்ள சிறுபான்மை ஆணையத்துக்கு என சில பணிகள் உள்ளன. இந்த பணிகளில் அரசியல் கூடாது என்பது விதிமுறையாகும். இவற்றை மீறும் வகையில் சிறு பான்மை ஆணையத் தலைவர் நடந்து கொண்டுள்ளார்.

இது தேர்தல் விதிமுறைகளுக்கு முரணானதாகக் கருத வேண்டி இருப்பதால், தாங்கள் இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் மனுவில் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்