மதுரை மாவட்ட அரசு மருத்துவமனைகளில் முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்துவதில் ஆர்வமில்லாததால், கடந்த மூன்று ஆண்டுகளில் ரூ. 1.14 கோடி நிதி குறைந்ததால் சுகாதாரத்துறை அதிர்ச்சி அடைந்துள்ளது.
தமிழகத்தில் 2009-10-ம் ஆண்டில் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் தொடங்கப்பட்டது. இதற்காக தமிழக அரசு, அப்போது ரூ. 517 கோடி நிதி ஒதுக்கியது. அந்த ஆண்டில் அரசு மருத்துவமனைகள் வெறும் 0.7 சதவீதம் (ரூ.4 கோடி) அளவுக்கே இந்த திட்டத்துக்கான நிதியை பயன்படுத்தினர். தனி யார் மருத்துவமனைகள், 75 சதவீதம் (ரூ. 394 கோடி) நிதியை பயன்படுத்தினர். இந்த நிதி, அரசு மருத்துவமனைகளை காட்டிலும் சுமார் 100 மடங்கு அதிகமாகும். இதேபோல, 2010-11-ம் ஆண்டும் காப்பீட்டுத் திட்டத்தை பயன்படுத்துவதில் அரசு மருத்துவமனைகளுக்கு ஆர்வம் இல்லை.
இதையடுத்து, அரசு மருத்துவ மனையில் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை ஊக்கப்படுத்த சிகிச்சை மேற்கொள்ளும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவக் குழுவினருக்கு 15 சதவீதம் ஊக்கத் தொகையும், மருத்துவமனை வளர்ச்சிக்கு நேரடி நிதியாக 25 சதவீதம் பயன்படுத்திக் கொள்ளவும் சுகாதாரத்துறை உத்தரவிட்டது. அதன்பிறகே அரசு மருத்துவமனைகள், காப்பீட்டுத் திட்டத்தில் உயிர் காக்கும் அறுவை சிகிச்சைகளை அதிகமாக செய்யத் தொடங்கின. அதனால், 2012-13-ம் ஆண்டில் சுமார் ரூ. 148 கோடியும், 2013-14-ம் ஆண்டில் மேலும் ரூ. 100 கோடி அதிகரித்து ரூ.245 கோடிக்கு நிதியை பயன்படுத்தினர். இதனால், உயிர் காக்கும் உயர் சிகிச்சை பெற முடியாத ஏழை நோயாளிகள் கூட ரூ.10 லட்சம் வரைக்கும் இந்த திட்டத்தில் உயர் சிகிச்சை பெற்று பயன் அடைந்தனர்.
இந்நிலையில், தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக 80-க்கும் மேற்பட்ட அரசு மருத்துவ மனைகளில் காப்பீட்டுத் திட்ட நிதியை சரியாக பயன்படுத்தாத நிலை இருந்து வருகிறது. ஆண்டுக்கு ஆண்டு இந்த ஆர்வம் குறைந்து வருவது, சுகாதாரத்துறையை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இதுகுறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பெற்ற தகவல்கள் குறித்து, மதுரையைச் சேர்ந்த சுகாதாரச் செயற்பாட்டாளர் ஆனந்த் கூறியதாவது:
காப்பீட்டுத் திட்ட நிதியை பயன்படுத்துவதில் மதுரை மாவட்டம் பின்தங்கியுள்ளது. இங்குள்ள மாவட்ட அரசு மருத்துவமனைகளில் ஒவ்வொரு ஆண்டும் உள் நோயாளிகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே வருகிறது. ஆனால், காப்பீட்டுத் திட்ட நிதியை முழு அளவில் பயன்படுத்தாமல் ஒவ்வொரு ஆண்டும் பயன்படுத்தும் குறைந்து கொண்டே வருகிறது. 2013-ம் ஆண்டு 2 கோடியே 27 லட்சத்து 76 ஆயிரத்து 110 ரூபாய் என்றிருந்த நிதி, 2015-ஆம் ஆண்டில் ஒரு கோடியே 13 லட்சத்து 86 ஆயிரத்து 295 ரூபாயாக குறைந்தது. ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் ஒவ்வொரு ஆண்டும் உள் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்து வரும்நி லையில், காப்பீட்டு திட்டத்தில் பயன்படுத்தப்படும் நிதி அதிகரித் துக் கொண்டே வருகிறது.
காப்பீட்டுத் திட்டங்களை பயன்படுத்துவதில் மருத்துவக் கல்லூரிகள் இல்லாத மாவட்ட ங்களான ராமநாதபுரம், விருதுநகரில் உள்ள அரசு மருத்து வமனைகள் ஆண்டுக்கு ரூ.6 கோடிக்கு மேல் காப்பீட்டுத் திட்ட நிதியை பயன்படுத்தி உள்ளன. ஈரோடு, கரூர், சேலம், அரியலூர், திருப்பூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஒரு கோடி ரூபாய் அளவுக்கே காப்பீட்டுத் திட்ட நிதியை பயன்படுத்தி உள்ளன என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
24 mins ago
தமிழகம்
32 mins ago
தமிழகம்
57 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago