கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் உள்ளாட்சித் துறை மற்றும் வீட்டு வசதித் துறை அமைச்சராக இருந்த துரைராஜ் (65) ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
கடந்த ஆண்டு உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட அவருக்கு உணவுக் குழலில் புற்றுநோய் பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது. மதுரை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர், ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி அளவில் மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே பெருங்காமநல்லூரில் உள்ள தனது வீட்டில் காலமானார்.
அவருக்கு நாகராணி என்ற மனைவியும், 3 மகன்களும் உள்ளனர். மூத்த மகன் தனராஜ் சேடபட்டி ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலராக உள்ளார். 2-வது மகன் ரமேஷ்வரன் எரிவாயு ஏஜென்ஸி வைத்துள்ளார். கடைசி மகன் லட்சப்பிரபு பெருங்காமநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித் தலைவராக உள்ளார்.
மதுரை மாவட்டம், பேரையூர் குழிமாற்றுத் திருவிழாவில் கலந்து கொண்ட சர்ச்சையால் அமைச்சர் பதவியை இழந்த துரைராஜ், பின்னர் மாவட்டச் செயலர் பதவியையும் இழந்தார். தற்போது மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. அவைத் தலைவராக பதவி வகித்து வந்த இவர், விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பில் ஆர்வம் காட்டி வந்தார்.
முதல்வர் இரங்கல்
கட்சியின் மீது மிகுந்த விசுவாசம் கொண்டவர் முன்னாள் அமைச்சர் துரைராஜ். அவரது மறைவு கட்சிக்கு பெரும் இழப்பு என முதல்வர் ஜெயலலிதா இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago