ஆல் இன் ஆல் அம்மா... சொல்வதெல்லாம் சும்மா: கார்த்தி சிதம்பரம் பதிலடி

By செய்திப்பிரிவு

முதல்வர் ஜெயலலிதாவின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் 'ஆல் இன் ஆல் அம்மா.. சொல்வதெல்லாம் சும்மா' என சிவகங்கை காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி ப. சிதம்பரம் பதிலடி கொடுத்துள்ளார்.

மதுரை டென்னிஸ் சங்கம், டி.வி.எஸ் நிறுவனம், தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் இணைந்து மார்ச் 22-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை டென்னிஸ் போட்டி மதுரையில் நடைபெறுகிறது.

இதன் தொடக்க விழாவில் சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி ப.சிதம்பரம் கலந்து கொண்டார்.

அப்போது, அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, "சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் கட்சி டெபாசிட் இழக்கும் என முதல்வர் கூறினார். ஆனால், டெபாசிட் இழப்பது யார் என்பதை மக்களே தீர்மானிப்பர். அவர் கூறிய வார்த்தைகளை நான் அர்ச்சனையாக ஏற்றுக் கொள்கிறேன்.

'ஆல் இன் ஆல் அம்மா.. சொல்வதெல்லாம் சும்மா…' நாங்கள் மக்களின் தேவைக்காக ஏ.டி.எம் மையங்களை அமைத்தோம். ஆனால், அவரோ டாஸ்மாக் மதுக் கடைகளை மட்டுமே அமைத்திருக்கிறார்" என்றார் கார்த்தி சிதம்பரம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

20 mins ago

தமிழகம்

46 mins ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்