மஞ்சள்மயமான நீலகிரி வனப்பகுதி: சுற்றுச்சூழல், உடல்நிலைக்கு ஆபத்தை ஏற்படுத்தும் சீகை மரங்கள் - அழிக்க முடியாமல் வனத்துறை திணறல்

By ஆர்.டி.சிவசங்கர்

சீகை மரங்கள் பூத்துக் குலுங்கு வதால் நீலகிரி மாவட்டமே மஞ்சள் மயமாகி உள்ளது. காண்பதற்கு ரம்மியமாகக் காட்சியளித்தாலும், இது சுற்றுச்சூழலுக்கு கேடு விளை விப்பவை என சூழலியல் ஆர்வலர் கள் கவலை கொண்டுள்ளனர்.

நீலகிரி மாவட்ட வனங்கள் அந்நிய மரங்களின் ஆக்கிரமிப்பில் சிக்கி உள்ளன. இவற்றில் முக்கியமான ஆக்கிரமிப்பாளன் சீகை மரங்கள். ஆஸ்திரேலிய நாட்டைத் தாயமாகக் கொண்ட இந்த மரங்கள் 1840-ல் இருந்து நடவு செய்யப்பட்டன. இவை இயற்கை சமநிலையை பாதித்ததால் 1988-ம் ஆண்டு வரையறுக்கப்பட்ட வனக்கொள்கையில், சோலைகள் மற்றும் புல்வெளிகளை பாதுகாக்க கற்பூரம், சீகை மரங்களை அகற்ற முடிவு செய்யப்பட்டது.

15 ஆயிரம் ஹெக்டேரில்

சீகை மரங்களைத் தொடர்ந்து 3 ஆண்டுகள் அப்புறப்படுத்தினால் தான் அவற்றை அழிக்க முடியும். வனத் தீ ஏற்பட்டாலும் சீகை விதைகள் உயிர் பெற்றுவிடும். மாவட்டத்தில் மொத்தம் 15 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் கற்பூரம் மற்றும் சீகை சோலைகள் உள்ளன. இவற்றை அகற்றும் திட்டத்தின் கீழ் முக்கூர்த்தி தேசிய பூங்கா, தெற்கு வனக் கோட்டத்துக்கு உட்பட்ட அப்பர் பவானி, வடக்கு வனக் கோட்டத்துக்கு உட்பட்ட வடக்கு சரகங்களில் சுமார் 150 ஹெக்டேர் பரப்பிலான கற்பூரம் மற்றும் சீகை மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. இது மொத்த பரப்பில் 1 சதவீதம் மட்டுமே. சீகை மரங்களை அகற்று வது வனத்துறைக்கு பெரும் சவா லாக உள்ளது.

இந்நிலையில், தற்போது மாவட் டம் முழுவதும் சீகை மரங்கள் பூக்கத் தொடங்கி உள்ளன. இத னால் மரங்கள் முழுவதும் மஞ்சள் நிறமாகக் காட்சி அளிக்கின்றன. பார்ப்பதற்கு இவை ரம்மியமாக இருந்தாலும், மாவட்டத்தின் சூழ லுக்கு இவை பெரும் கேடு விளை விப்பதாக சூழலியலாளர்கள் கூறுகின்றனர்.

நீலகிரி சுற்றுச்சூழல் மற்றும் கலாச்சார அறக்கட்ளை நிர்வாகி சிவதாஸ் கூறியதாவது: மாவட்டத் தில் சீகை மரங்கள் பூக்கத் தொடங்கி யுள்ளன. ஒரு மரத்தில் பல்லாயிரக் கணக்கான மலர்கள் இருக்கும். இவற்றில் இருந்து விதைகள் பரவு வதால் இந்த மரங்களின் வளர்ச் சியைக் கட்டுப்படுத்துவது வனத் துறையினருக்கு பெரும் சவாலாக இருக்கிறது. இந்த மரங்களில் மலர்கள் பூக்கும் காலத்தில், மக்களுக்கு ஆஸ்துமா மற்றும் சரும நோய்கள் ஏற்படும். இந்த மலர்களின் மகரந்தங்கள் காற்றில் பரவுவதால் ஆஸ்துமா நோயாளி களுக்கு மூச்சுக் கோளாறு ஏற்படுகி றது. இயற்கைக்கு ஆபத்தாக உள்ள இந்த மரங்கள், மக்களின் உடல் நிலைக்கு பெரும் பாதிப்பு ஏற்படுத்து கின்றன. இவற்றை முழுமையாக அகற்ற வேண்டும் என்றார்.

இந்த மரங்களின் பூக்கள் மருத் துவ குணம் கொண்டுள்ளதாகக் கூறி சிலர் வெட்டி எடுத்துச் செல் கின்றனர். வனத்துறையினர் அனுமதி இல்லாமல் இந்த மலர்கள் கடத்தப்பட்டு வருகின்றன.

உதகையில் உள்ள மத்திய ஓமியோபதி ஆய்வு சேகரிப்புக் கூடத்தில் தாவரவியல் வல்லுநராகப் பணியாற்றி வரும் டாக்டர் எஸ்.ராஜன் கூறியதாவது: அகேசியா டெகரன்ஸ், அகேசியா மான்கிம் ஆகிய 2 சீகை மர இனங்கள் நடவு செய்யப்பட்டன. இந்த மரங்களில் பல்லாயிரக்கணக்கான பூக்கள் பூக்கும். ஒரு கொத்து பூவில் சுமார் ஆயிரம் விதைகள் இருக்கும். இந்த மரங்களின் பூக்களில் மருத் துவ குணம் இல்லை, வாசனைத் திரவியங்கள் தயாரிக்க பயன்படு கின்றன என்றார்.

ஒரு வகையில், இந்த பூக்கள் கடத்தல், மாவட்டத்துக்கு மறைமுக மாக நன்மை அளிப்பதனால், வனத் துறையினர் கண்டுகொள்வ தில்லை. இந்த பூக்களை எடுத்துச் செல்வதை முறைப்படுத்தினால், வனத்துறைக்கு வருவாயும் கிடைக் கும் மரங்களின் வளர்ச்சியும் கட்டுப்படுத்தப்படும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

தமிழகம்

12 mins ago

தமிழகம்

18 mins ago

தமிழகம்

38 mins ago

தமிழகம்

39 mins ago

தமிழகம்

57 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்