தமிழகம் முழுவதும் உயர் நீதிமன்ற கிளை உத்தரவின்பேரில் சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. போதுமான நிதி இல்லாததால் கருவேல மரங்களை அகற்றும் பணியில் மாவட்ட நிர்வாகங்கள் ஈடுபாடு காட்டாமல் இருந்து வந்தன.
இதையடுத்து சீமை கருவேல மரங்களை அகற்றுவதற்காக மாவட்ட நிர்வாகங்களுக்கு தேவைப்படும் நிதியை வழங்கு வதற்காக நீதிபதி ஏ.செல்வத்தின் முயற்சியின்பேரில் உயர் நீதிமன்ற கிளையிலுள்ள இந்தியன் வங் கியில் பதிவாளர் பெயரில் மார்ச் 21-ம் தேதி தனி வங்கி கணக்கு தொடங்கப்பட்டது.
இந்த வங்கிக் கணக்கில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், மாவட்ட ஆட்சியர்கள், பொது மக்கள் சார்பில் பணம் செலுத்தப்பட்டு வருகிறது. நீதிபதிகள் பலர் தாங்கள் விசாரிக்கும் வழக்குகளில் விதிக்கப்படும் அபராதத் தொகையை இந்த வங்கிக் கணக்கில் செலுத்த உத்தரவிட்டு பங்களிப்பு வழங்கி வருகின்றனர். நேற்று வரை இந்த வங்கி கணக்கில் ரூ.18,70,637 டெபாசிட் செய்யப்பட்டது.
மதுரையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்றின் மேலாண்மை இயக்குநர் பி.சத்திய மூர்த்தி, சேகர் ஆகியோர் ரூ.1 லட்சத் துக்கான காசோலையை நீதிபதி ஏ.செல்வத்திடம் நேற்று வழங்கினர். அப்போது வழக் கறிஞர் ஆணையர்கள் ஆர்.காந்தி, கு.சாமிதுரை, என்.கிருஷ்ணவேணி, பினைகாஸ், சுப்பாராஜ், கார்த்திகேயன் ஆகியோர் உடனிருந்தனர்.
கருவேல மர வங்கி கணக்கில் இருந்து இதுவரை மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல், திருச்சி, தேனி மாவட்டங்களுக்கு கருவேல மரம் அகற்றும் பணிக்காக ரூ.12,09,000 வழங்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
16 hours ago