தேசிய அளவில் கடந்த 2015-ம் ஆண்டு நடந்த குற்ற வழக்குகள் கணக்கெடுப்பில் கொலை, ஆள்கடத்தல் குற்றங்கள் மற்றும் வரதட்சணை தொடர்பான மரணங்களில் உத்தரப்பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. இதுபோன்ற வழக்கு களில் தமிழகம் ‘முன்னிலை’ வகிக் காததும், பெண்களிடம் தமிழக ஆண்கள் கண்ணியமாக நடந்துகொள்வதும் ஆறு தலைத் தருகிறது.
தேசிய அளவில் கடந்த 2015-ல் நடந்துள்ள குற்றங்கள் பட்டியலை தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (என்சிஆர்பி) வெளியிட்டுள்ளது. இதன் படி, இந்திய தண்டனைச் சட்டத்தில் அடங்கும் குற்ற வழக்குகளில் தேசிய அளவில் மகாராஷ்டிரா (2,75,414) முதல் இடத்திலும், மத்தியப் பிரதேசம் (2,68,614) இரண்டாம் இடத்திலும், கேரளா (2,57,074) மூன்றாம் இடத்திலும், ராஜஸ்தான் (1,98,080) நான்காம் இடத்திலும், தமிழகம் (1,87,558) ஐந்தாம் இடத்திலும் உள்ளன.
‘7 சகோதரிகள்’ என அழைக்கப்படும் சிக்கிம் (766), நாகாலாந்து (1,302), மிசோரம் (2,228), அருணாச்சலப் பிரதேசம் (2,968), மணிப்பூர் (3,847), மேகாலயா (4,079), திரிபுரா (4,692) மற்றும் கோவா (3,074) ஆகியவை இப்பட்டியலில் கடைசி இடங்களில் உள்ளன. டெல்லியில் 91,377 குற்ற வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
கொலை வழக்குகள்
கொலை வழக்குகளில் உத்தரப் பிரதேசம் (4,730) முதல் இடத்திலும், பிஹார் (3,178) இரண்டாம் இடத்திலும், மகாராஷ்டிரா (2,509) மூன்றாம் இடத்திலும், மத்தியப்பிரதேசம் (2,339) நான்காம் இடத்திலும், மேற்கு வங்கம் (2,096) ஐந்தாம் இடத்திலும் உள் ளன. தமிழகத்தில் 1,748 கொலை சம்ப வங்கள் நடந்துள்ளன. தேசிய அளவில் 32,127 கொலை வழக்குகள் பதிவாகியுள்ளன.
இதேபோல, கடத்தல் வழக்குகளிலும் உத்தரப்பிரதேசம்தான் (11,999) முதல் இடத்தில் உள்ளது. டெல்லியில் 7,730, தமிழகத்தில் 1,603 கடத்தல் சம்பவங்கள் நடந்துள்ளன. நாடு முழுவதும் 82,999 பேர் கடத்தப்பட்டுள்ளனர்.
பாலியல் வன்முறை
பாலியல் பலாத்காரத்தில் மத்தியப் பிரதேசம் (4,391) முதல் இடத்திலும், மகாராஷ்டிரா (4,144) இரண்டாம் இடத்திலும், ராஜஸ்தான் (3,644) மூன்றாம் இடத்திலும், உத்தரப்பிரதேசம் (3,025) நான்காம் இடத்திலும், ஒடிஷா (2,251) ஐந்தாம் இடத்திலும் உள்ளன. தமிழகத்தில் 421 பலாத்கார சம்பவங்கள் நடந்துள்ளன. டெல்லியில் 2,199 சம்பவங்கள், தேசிய அளவில் 34,651 சம்பவங்கள் நடந்துள்ளன.
நாடு முழுவதும் 2010-14 வரையிலான 5 ஆண்டுகால சராசரி பலாத்கார (28,349) வழக்குகளை ஒப்பிடும்போது, 2015-ல் 6,202 சம்பவங்கள் கூடுதலாக நடந்துள்ளது. தவிர 4,437 பாலியல் பலாத்கார முயற்சி சம்பவங்களும் நடந்துள்ளன.
மோசடி வழக்குகள்
வங்கி பண மோசடி வழக்குகளில் மேற்கு வங்கம் (415) முதல் இடத்திலும், மகாராஷ்டிரா (190) இரண்டாம் இடத்திலும், தமிழகம் (186) மூன்றாம் இடத்திலும் உள்ளன. குஜராத் (87) நான்காம் இடத்திலும், ஆந்திரா (70) ஐந்தாம் இடத்திலும் உள்ளன. டெல்லியில் 68 வழக்குகளும், தேசிய அளவில் 1,662 வழக்குகளும் பதிவாகியுள்ளன.
வரதட்சணைக் கொடுமை
நாடு முழுவதும் வரதட்சணைக் கொடுமையால் 7,634 பெண்கள் மரணம் அடைந்துள்ளனர். வரதட்சணை மரணத்தைப் பொறுத்தவரை, உத்தரப் பிரதேசம் (2,335) முதல் இடத்திலும், பிஹார் (1,154) இரண்டாம் இடத்திலும், மத்தியப்பிரதேசம் (664) மூன்றாம் இடத்திலும், மேற்கு வங்கம் (498) நான்காம் இடத்திலும், ராஜஸ்தான் (463) ஐந்தாம் இடத்திலும் உள்ளன. தமிழகத்தில் 65 மரணங்கள், டெல்லியில் 125 மரணங்கள் நடந்துள்ளன.
அலுவலகங்கள், பொது இடங்கள், போக்குவரத்து உள்ளிட்ட இதர இடங்களில் பெண்களிடம் அத்துமீறியும், அநாகரிகமாகவும் நடந்துகொண்டதில் ஆந்திரா (2,200) முதல் இடத்திலும், தெலங்கானா (1,288) இரண்டாம் இடத்திலும் உள்ளன. மகாராஷ்டிரா (1,119) மூன்றாம் இடத்திலும், மேற்கு வங்கம் (455) நான்காம் இடத்திலும், ஒடிஷா (472) ஐந்தாம் இடத்திலும் உள்ளன. டெல்லியில் 1,492, தேசிய அளவில் 8,685 அநாகரிக சம்பவங்கள் நடந்துள்ள நிலையில், தமிழகத்தில் இதுதொடர்பாக 20 வழக்குகள் மட்டுமே பதிவாகியிருப்பது ஆறுதலான தகவல்.
கொலை, கடத்தல், வரதட் சணை மரணங்களில் இந்தியாவில் ஒட்டுமொத்தமாக உத்தரப்பிரதேசம் தேசிய அளவில் முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய அளவில் கடந்த 2015-ல் நடந்துள்ள குற்றங்கள் பட்டியலை தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (என்சிஆர்பி) வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் தமிழகம் ஐந்தாம் இடத்தில் உள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 min ago
தமிழகம்
22 mins ago
தமிழகம்
23 mins ago
தமிழகம்
49 mins ago
தமிழகம்
42 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago