இறக்குமதி கட்டுப்பாடு தளர்வு எதிரொலி: தங்கம் விலை வீழ்ச்சி

தங்க இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளதன் காரணமாக தங்கம், வெள்ளி விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது.

அன்னியச் செலாவணி வெளியேறுவதை கட்டுப்படுத்துவதற்காக, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தங்கத்தின் மதிப்பில் 10 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்பட்டது.

இந்நிலையில், இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் அளவில் குறைந்தபட்சம் 20% ஆபரணங்களாக ஏற்றுமதி செய்யப்பட வேண்டும் என்ற விதியை ரிசர்வ் வங்கி திரும்பப் பெற்றது.

இதனையடுத்து கடந்த திங்கள் கிழமை முதலே தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து குறைந்து வருகிறது.

சென்னயில் இன்று (சனிக்கிழமை) காலை நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.2419-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.37.20 -க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.304 குறைந்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE