வேகமாக அழியும் ஆதிவாசிகளின் கலாச்சார பெருமைகள்

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

இன்று ஆகஸ்ட் 9 'உலக பூர்வ குடிமக்கள் தினம்'

ஐக்கிய நாடுகள் சபை ஆண்டு தோறும் ஆகஸ்ட் 9-ம் தேதியை உலக பூர்வகுடிகளின் தினமாகக் கடைபிடித்து வருகிறது. மண்ணின் மூத்த குடிகளான ஆதிவாசி மக்களின் கலை, கலாச்சாரம், பண்பாடு, வாழ்வியல் சிறப்புகளை, இக்கால தலைமுறையினர் அறிந்து கொள்ளவும், புரிந்து கொள்ளவும் அவர்களது உரிமைகளைப் பாதுகாக்கவும், இந்த தினம் கொண்டாடப்படுவதன் முக்கிய நோக்கமாகக் கருதப்படுகிறது.

ஆதிவாசிகள், காடுகளின் இடையே, இயற்கையை சேதப் படுத்தாமல், வனவிலங்குகளை தொந்தரவு செய்யாமல் இயற்கை யோடு ஒன்றி வாழ்கின்றனர். இவர்களை பெருமைப்படுத்தி, அங்கீகரிக்க மறுக்கும் இன்றைய நவநாகரிக சமுதாயம், வளர்ச்சி என்ற ஒற்றை வார்த்தையில், உலகம் முழுவதும் இருக்கும் பூர்வ குடிமக்களை ஒடுக்கி அப்புறப்படுத்த நினைக்கிறது. அதனால், பாரம்பரிய கலாச்சாரம், தொன்மங்கள் மட்டுமல்லாது அவர்களது இனங்களே வேகமாக அழிகின்றன.

இதுகுறித்து தமிழகம் முழுவதும் ஆதிவாசிகள் உரிமைக்காகவும் கலாச்சாரப் பெருமைகளைப் பாது காக்க போராடும் சமூக செயல்பாட் டாளர் ச. தனராஜ் கூறியதாவது:

ஆதிவாசிகள் நம்முடைய முன்னோர்கள். ஒரு மரத்துக்கு வேர் எப்படி அடித்தளமோ, அதுபோல அவர்கள் நமக்கு. நாம் அவர்களுடைய இலையாகவோ, கிளையாகவோ உள்ளோம். அவர் களை பற்றிய அறிதலும், புரிதலும் நமக்கு குறைவு. இவர்கள் 75 சதவீதம் காடுகளிலும், 25 சதவீதம் நகரங்கள், சமவெளிகளிலும் வாழுகின்றனர். உலகத்தில் 90 நாடுகளில் 7 ஆயிரம் மொழி பேசக்கூடிய 37 கோடி ஆதிவாசிகள் உள்ளனர். இவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் இந்தியாவில் வாழ்கின்றனர். இவர்களிடம் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிரினக் கலாச்சாரம் பரவிக் கிடக்கிறது. சுற்றுச்சூழல், காலநிலையில் பழங்குடியினரின் பங்களிப்பு மிக அதிகம். இயற்கையை சூறையாட முயன்ற பல சம்பவங்களில் நிறைய ஆதிவாசிகள் உயிர் தியாகம் செய்துள்ளனர். பணத்தை வைத்து மனிதனின் வளர்ச்சி கணக்கிடப்படுகிறது. அது தவறு. கலாச்சார அடிப்படையில் பழங் குடியின மக்கள் மிகவும் உயர் வானவர்கள். அதனால், வெகுஜன மக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆதிவாசிகளின் வாழ்க்கை, கலாச்சாரம், கலை நாடகத்தை தெரிந்துகொள்ள வேண்டும். அவர்களுடைய பாடல்கள், கதைகள், வழிபாடுகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டும். இயற்கையில் இருந்து எதையும் குறைவாக எடுப்பவர்களே சிறந்த மனிதராக இருக்க முடியும். அது தண்ணீர், காற்று, நிலம், மரம் எதுவாகவும் இருக்கலாம் என்றார்.

அவர்கள் இடத்திலேயே வாழ விடுங்கள்

சமூக ஆர்வலர் எவிடென்ஸ் கதிர் கூறியதாவது: இந்த மண்ணின் மூத்த குடிமக்களான காடுகளில் வசிக்கும் பழங்குடியின மக்கள், நிலங்களில் வசிக்கும் தலித்துகள், கடல் சார்ந்து வாழும் மீனவர்கள் என மூன்று வகையாக சொல்லலாம். இவர்களில் மீனவர்களை கடல் பழங்குடியின மக்களாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாளாக எழுப்பப்பட்டு வருகிறது. காடு, வனம், வனவிலங்குகளை பழங்குடியின மக்கள்தான், ஆதிகாலத்தில் பாதுகாத்து வந்தனர். அப்போது வனவிலங்குகள் காடுகளை விட்டு வெளியேறவில்லை. மரங்கள் வெட்டப்படவில்லை. அந்நிய மரங்கள் வரவில்லை. ஆனால், இன்று ‘வளர்ச்சி’ என்ற ஒற்றை வார்த்தையில் நாட்டில் வசித்த மனிதர்கள் எப்போது காட்டுக்குள் நுழைந்தார்களோ அன்று முதல் காடுகளை அந்நிய மரங்கள், வனத்துறையினர், கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆக்கிரமித்துக் கொள்ள தொடங்கிவிட்டன. ஆதிவாசிகள் அரசு சான்றுகள், ஓட்டுரிமை, அடிப்படை வசதிகளை பெற முடியவில்லை. ஆதிவாசிகளுக்கு உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை. அவர்கள் வாழ்க்கையை அவர்கள் இடத்திலேயே வாழ நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

15 mins ago

தமிழகம்

37 mins ago

தமிழகம்

40 mins ago

தமிழகம்

34 mins ago

தமிழகம்

59 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்