தமிழக வனத்துறையில் 45% பணியிடங்கள் காலி: மானிய கோரிக்கையில் புதிய அறிவிப்பு வெளியாகுமா?

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

வனத்துறையில் நீடிக்கும் 45 சதவீத காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வரும் 2-ம் தேதி நடைபெற உள்ள சட்டப் பேரவை மானியக் கோரிக்கையில் வெளியிட வனத்துறையினர் எதிர்பார்க்கின்றனர்.

தமிழக புவி பரப்பில் 17 சதவீதம் வனப்பகுதிகள் உள்ளன. இங்கு விலை மதிப்புமிக்க சந்தனம், தேக்கு உள்ளிட்ட மரங்களும், மூலிகைத் தாவரங்களும், யானை, புலி, சிறுத்தை, கரடி, சிங்க வால் குரங்கு, சாம்பல் நிற அணில், மான், கேளை ஆடு உள்ளிட்ட பல அரிய விலங்குகளும், பறவைகளும் உள்ளன. வனப் பகுதிகளையும், வன விலங்களையும் பாதுகாக்க தமிழக வனத் துறையில் 12 வன பாதுகாவலர்கள் மேற்பார்வையில், 32 மாவட்ட வன அலுவலர்கள் தலைமையில் உதவி வன பாதுகா வலர்கள், வனச்சரகர்கள், வனவர், வனக்காப்பாளர், வனக்காவலர்கள் பணிபுரிகின்றனர். வனப்பகுதிக ளையும், வன விலங்குகளையும் பாதுகாப்பதில் வனவர், வனக் காப்பாளர், வனக் காவலர்கள் பணி மகத்தானது. தற்போது வனத் துறையில் இந்த களப்பணியாளர்கள் பற்றாக்குறை அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து வனத்துறை ஊழி யர்கள்கூறியதாவது:

மொத்தம் உள்ள 32 மாவட்ட வன அலுவலர்களில் 6 பணியிடம் காலியாக உள்ளது. வனச்சரகர், வனவர்கள், வன காப்பாளர்கள், வன காவலர்கள் பணியிடம் 45 சதவீதம் காலியாக இருக்கிறது. வனவர்கள், வனக் காப்பாளர், வனக் காவலர்கள் பணியிடங்களை நிரப்ப கடந்த 4 ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை. வனப் பகுதியில் 5,000 முதல் 20,000 ஹெக்டேர் நிலப்பரப்பு வரை ஒரு பீட் நிர்ணயிக்கப்படுகிறது.

இந்த ஒரு பீட்டுக்கு ஒரு வனக் காப்பாளர், ஒரு வனக் காவலர் பணிபுரிய வேண்டும். இதுபோன்ற 3 பீட்டுக்கு ஒரு வனவர் பணிபுரிய வேண்டும். 3 வனக் காப்பாளர் பணிபுரியும் 9 பீட்டுக்கு ஒரு வனச்சரகர் பணிபுரிய வேண்டும். 10 வனச்சகரர்களுக்குக் குறைந்த பட்சம் ஒரு மாவட்ட உதவி வன அலுவலர், ஒரு மாவட்ட வன அலுவலர் பணிபுரிய வேண்டும். களப்பணியாளர்கள் காலிப்பணி யிடங்களை நிரப்ப வரும் 2-ம் தேதி சட்டப்பேரவையில் நடை பெறும் வனத்துறை மானியக் கோரிக்கையில் உறுதியளிக்க வேண்டும் என்றனர்.

78 வனச் சரகர்கள் தேர்வு

இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “டிஎன்பிஎஸ்சி மூலம் சமீபத்தில் 78 வனச் சரகர்கள் தேர்வு செய்யப் பட்டுள்ளனர். அவர்கள் தற்போது கோவை மற்றும் ஹைதராபாத்தில் பயிற்சியில் உள்ளனர். அவர்கள் பயிற்சி முடித்ததும் பணிக்குத் திரும்ப உள்ளனர். தமிழ்நாடு வனத்துறை சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் களப் பணியாளர்களை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

வன விலங்குகள் பாதுகாப்பில் சிக்கல்

வன அலுவலர்கள் கூறும்போது, “களப்பணியாளர் பற்றாக்குறையால் வனப் பகுதியையும், வன விலங்குகளையும் பாதுகாப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. போலீஸாரை தேர்வு செய்ய எப்படி சீருடைப் பணியாளர் தேர்வாணையம் இருக்கிறதோ அதுபோல், வன களப்பணியாளர்களை தேர்வு செய்ய கடந்த 2014-ம் ஆண்டு தமிழ்நாடு வனத்துறை சீருடைப் பணியாளர் தேர்வாணையம் உருவாக்கப்பட்டது. இந்த தேர்வாணையம் மூலம் ஆண்டுதோறும் களப்பணியாளர்களான வனவர், வனக் காப்பாளர், வனக் காவலர்களை தேர்வு செய்ய வேண்டும். ஓய்வுபெறும் வனச்சரகர், மாவட்ட வன அலுவலர்கள் பணியிடங்களை உடனுக்குடன் நிரப்ப வேண்டும். ரேஞ்சர் பணியிடங்களை நிரப்ப ஆண்டுதோறும் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை நடத்த வேண்டும். களப்பணியாளர்கள் சரியான எண்ணிக்கையில் இருந்தால் மட்டுமே காடுகளையும், வனவிலங்குகளை பாதுகாக்கவும், காப்பாற்றவும் முடியும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

தமிழகம்

10 mins ago

தமிழகம்

11 mins ago

தமிழகம்

26 mins ago

தமிழகம்

48 mins ago

தமிழகம்

51 mins ago

தமிழகம்

45 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்