உள் ஒதுக்கீடு: அருந்ததியர் மக்கள் கட்சி வேண்டுகோள்

அருந்ததியர் 3% இட ஒதுக்கீட் டுக்கு அனைத்து கட்சி தலைவர் களும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று அருந்ததியர் மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் நிறுவனத் தலைவர் வலசை ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அருந்ததியருக்கான 3% உள் இட ஒதுக்கீட்டின் காரணமாக கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 346 மாணவர்கள் மருத்துவம், 8,930 மாணவர்கள் பொறியியல் படிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால், இந்த சட்டத்தை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக முதல்வரை நேரில் சந்தித்து கடந்த வாரம் மனு அளிக் கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத் தில் நடைபெறும் வழக்கில் தமிழக அரசு தன்னையும் மனுதாரராக இணைத்துக் கொண்டு, உள் ஒதுக்கீட்டுக்கு உரிய சட்ட பாதுகாப்பை வழங்க வேண்டும்.

அருந்ததியர் 3% உள் ஒதுக்கீட் டுக்கு ஆதரவு அளிக்குமாறு அனைத்து கட்சி தலைவர்களை யும் நேரில் சந்தித்து ஆதரவு திரட்டவுள்ளோம். இதற்கு தலைவர்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று கோருகிறோம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE