முஸ்லிம்களுக்கு தமிழகத்தில் வழங்கப்படுகிற 3.5 சதவீத இட ஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயர்த்திடக்கோரியும் அகில இந்திய அளவில் 10 சதவீத இட ஒதுக்கீடு அறிவிக்கக் கோரியும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட சிறை நிரப்பும் போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று கைதாகினர். இதனால், எழும்பூர், அண்ணாசாலை உள்ளிட்ட இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு வட மாவட்டங்களில் இருந்து பஸ், வேன், கார்களில் ஏராளமான தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் குவிந்தனர். எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் ஆயிரக்கணக்கானோர் திரண்டதால், போலீஸார் போக்குவரத்தை வேறு பாதையில் மாற்றி விட்டனர். ஆனாலும் எழும்பூர் பாந்தியன் சாலை, கிரீம்ஸ் சாலை, ஸ்பென்சர் சிக்னல், மாண்டியத் சாலை, ருக்மணி லட்சுமிபதி சாலை, எழும்பூர் ரயில் நிலையம் உள்ளிட்ட பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போராட்டத்தின் போது, தவ்ஹீத் ஜமாத் மாநிலத் தலைவர் ஜைனுல் ஆபிதீன் பேசியதாவது:
இந்தியாவில் முஸ்லிம் கள் கல்வியிலும், பொருளாதாரத் திலும் பின் தங்கிய நிலையில் உள்ளனர். அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு அமைத்த ரங்கநாத் மிஸ்ரா மற்றும் லிபர்ஹான் கமிஷன் பரிந்து ரைகளை வழங்கியுள்ளது. ஆனால், மத்திய, மாநில அரசுகள் அவற்றை அமல்படுத்த வில்லை. கடந்த தேர்தல்களில் காங்கிரஸ் மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் இட ஒதுக்கீடு தருவதாக பலமுறை வாக்குறு திகள் அளித்துள்ளன.
மத்தியில் 10 சதவீதமும், மாநிலத்தில் 7 சதவீதமும் முஸ்லிம் களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். தேர்தலுக்கு முன் இட ஒதுக்கீட்டை அறிவித்தால் மட்டுமே, தேர்தலில் நாங்கள் ஆதரவளிப்போம்” என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
12 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago