ஆள் மாறாட்டம், போலி ஆவணப் பதிவை தவிர்க்க அமைச்சர் அறிவுறுத்தல்

By செய்திப்பிரிவு

பதிவுத் துறையில் ஆள் மாறாட்டம் மற்றும் போலி ஆவணப் பதிவு களை தவிர்க்கும் வகையில் செயல்பட வேண்டுமென்று, பதிவுத் துறையினரை, தமிழக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் அறிவுறுத்தியுள்ளார்.

வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தலைமை யில், பதிவுத்துறை தலைவர் அலுவலகத்தில், பதிவுத்துறை செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது. அரசு முதன்மைச் செயலர் எஸ்.கே.பிரபாகர், வணிகவரி மற்றும் பதிவுத்துறைத் தலைவர் சு.முருகய்யா மற்றும் கூடுதல் பதிவுத்துறை தலைவர்கள் பங்கேற்றனர்.

பதிவுத்துறையில், கடந்த 2013-14ல் வருவாய் இலக்காக ரூ.9,221.98 கோடி நிர்ணயிக்கப்பட்டு, ரூ.8,055.74 கோடி இலக்கு எட்டப்பட்டுள்ளது. மேலும் 2014-15ம் ஆண்டுக்கு வருவாய் இலக்காக ரூ.10,470.18 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் கடந்த அக்டோபர் வரை, ரூ.4,585.07 கோடி இலக்கு எட்டப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களுக்கும், ஐந்து ஆண்டுகளுக்குள் சொந்த கட்டி டம் கட்டப்படும் என்ற இலக்கு செயலாக்கப்படும். பொது மக்கள் தங்களது சொத்து குறித்த வில்லங்கத்தை இலவசமாக இணையவழி தேடுதல் மேற்கொள் ளும் வசதி கடந்த ஜூன் மாதம் 11-ம் தேதி தொடங்கப்பட்டது. இதன் மூலம் கடந்த 18-ம் தேதி வரை 22,33,356 வில்லங்க தேடுதல்கள் இலவசமாக இணையவழி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆள்மாறாட்டப் பதிவு மற்றும் போலி ஆவணப்பதிவு ஆகிய வற்றை தடைசெய்யும் அரசின் உத்தரவுகளைத் தவறாமல் பின்பற்ற வேண்டும். முன் ஆவணங் கள் மற்றும் வருவாய் ஆவணங்கள், சமீபத்திய வில்லங்கச் சான்றுகள் ஆகியவற்றை பரிசோதித்து, பொதுமக்களுக்கு நலன் பயக்கும் வகையில் ஆவணப்பதிவு மேற்கொள்ள வேண்டும் என அமைச்சர் அறிவுறுத்தினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE