வாட்ஸ் அப்ல் ஆபாசப் படங்கள்: கேரள ஏடிஜிபி மீது சரிதா நாயர் புகார்

ஆபாசப் படங்கள் வாட்ஸ் அப்-ல் வெளியாக கேரள மாநில ஏடிஜிபி தான் காரணம் என தான் சந்தேகிப்பதாக சரிதா நாயர் குற்றம் சாட்டினார்.

கேரளத்தைச் சேர்ந்த தொழில் அதிபர் பிஜு ராதாகிருஷ்ணன் என்பவர் மனைவி சரிதா நாயர். இவர்கள் இருவரும் கோவையில் ஐ.சி.எம்.எஸ். என்ற நிறுவனத்தை தொடங்கி, மானிய விலையில் காற்றாலை அமைத்துத் தருவதாக அறிவித்தனர்.

அதை நம்பி ஊட்டியைச் சேர்ந்த ஜோத்சனா கிளியோசந்த் ரூ.6.50 லட்சமும், வடவள்ளியை சேர்ந்த தியாகராஜன் ரூ.26 லட்சமும் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் அவர்களுக்கு காற்றாலை அமைத்துக் கொடுக்கவில்லை.

இது குறித்த புகாரின் பேரில் கோவை மாவட்டக் குற்றப் பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து பிஜு ராதாகிருஷ்ணன், சரிதா நாயர், கோவை அலுவலக மேலாளர் ரவி ஆகியோரை கைது செய்தனர்.

இந்த வழக்கு கோவை 6-வது நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. குற்றம்சாட்டப்பட்ட 3 பேருக்கும் அக்டோபர் மாதம் 11-ம் தேதி குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நேற்று நடைபெற்றது. விசாரணையையொட்டி, சரிதா நாயர், பிஜு ராதாகிருஷ்ணன், ரவி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜரா கினர். விசாரணைக்குப் பின்னர், வழக்கு விசாரணையை டிசம்பர் 8-ம் தேதிக்கு நீதிபதி கார்த்திகேயன் ஒத்திவைத்தார்.

நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த சரிதா நாயர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

'வாட்ஸ் அப்' மூலம் என்னைப் பற்றிய ஆபாச வீடியோ காட்சிகள் பரப்பப்பட்டு வருகின்றன. இப் படத்தை அனுப்பியது யார்?, அது எங்கிருந்து அனுப்பப்பட்டது?. இதற்கு காரணமானவர்கள் யார்? என்று கண்டுபிடிக்குமாறு நான் வழக்கு தொடர்ந்துள்ளேன்.

ஆபாச வீடியோ காட்சிகளை பரப்பியதன் பின்னணியில் அரசியல்வாதிகளின் சதி உள்ளது. குறிப்பாக கேரள ஏ.டி.ஜி.பி. மீது எனக்கு சந்தேகம் உள்ளது. செய்தியாளர்களிடம் இது தொடர் பாகப் பேசுவது வழக்கு விசார ணையை பாதிக்கும். உரிய நேரத் தில் அதை அம்பலப்படுத்துவேன் என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE