கால் டாக்ஸி நிறுவனங்களின் நிபந்தனைகளால் ஓட்டுநர் - வாடிக்கையாளர் மோதல் அதிகரிப்பு: நிரந்தரமான கட்டணத்தை நிர்ணயிக்க கோரிக்கை

By எம்.மணிகண்டன்

தனியார் கால் டாக்ஸி நிறுவனங்கள் நிரந்தரமான கட்டணத்தை நிர்ண யிக்காமல் ஓட்டுநர்களுக்கு பல்வேறு நிபந்தனைகளை விதிப்பதால், ஓட்டுநர்களுக்கும், வாடிக்கையாளர் களுக்கும் இடையே அடிக்கடி மோதல் கள் உருவாவதாக சொல்லப் படுகிறது.

சென்னையில் சுமார் 10 நிறுவனங் கள், கால் டாக்ஸி சேவையை வழங்கி வருகின்றன. அந்த நிறுவனங்கள் நிர்ணயித்துள்ள நிலையற்ற கட்டண விகிதங்கள், ஓட்டுநர்களுக்கு தருகிற நிபந்தனைகள் போன்ற வற்றால் ஓட்டுநர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் மோதல் உருவாவது வாடிக்கையாகவுள்ளது. நிறுவனங்கள் தருகிற அழுத்தம், வாடிக்கையாளர்களுடனான மோதல், போக்குவரத்து காவல்துறையின் கெடுபிடி, குடும்ப சூழல் என இன்னல்களை கால் டாக்ஸி ஓட்டுநர்கள் அனுபவித்து வருகின்றனர்.

எனவே, ஓட்டுநர்களுக்கு விதித்துள்ள நிபந்தனைகளை நிறுவனங்கள் தளர்த்த வேண்டும், முறையான கட்டண விகிதத்தை நிர்ணயிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கால் டாக்ஸி ஓட்டுநர்கள் சென்னையில் கோட்டை நோக்கி பேரணியாக செல்லும் போராட்டத்தை வரும் 18-ம் தேதி நடத்தவுள்ளனர்.

தனியார் கால் டாக்ஸி ஓட்டுநர்கள் சந்தித்து வரும் பிரச்சினைகள் தொடர்பாக சந்தோஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்னும் ஓட்டுநர் கூறியதாவது:

நான் சொந்தமாக டாடா இண்டிகா கார் வைத்துள்ளேன். பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஒரு கால் டாக்ஸி நிறுவனத்தின் கீழ் கடந்த சில ஆண்டுகளாக எனது வாகனத்தை ஓட்டி வருகிறேன். ஒரு நாளைக்கு மொத்தம் 15 சேவைகள் அளிக்கும் வண்ணம் வாகனம் ஓட்ட வேண்டும். குறிப்பாக பீக் ஹவர் எனப்படும் மாலை 4 முதல் இரவு 11 மணி வரையான நேரத்துக்குள் 5 சேவைகளை ஓட்ட வேண்டும். இல்லையென்றால், அன்றைய வருமானம் முழுதாக கைக்கு வராது.

எனது நிலையிடம் தாம்பரம் ஆகும். பீக் ஹவரில் எனக்கு வருகிற முதல் சவாரி, படப்பையிலிருந்து திருவொற்றியூர் செல்ல வேண்டும் என்றிருந்தால், தாம்பரத்திலிருந்து படப்பை சென்று வாடிக்கையாளரை ஏற்றிக் கொண்டு திருவொற்றியூர் செல்வதற்கு எப்படியும் 7 மணி ஆகிவிடும்.

திருவொற்றியூரில் மற்ற இடங்களைப் போல் வாடிக்கை யாளர்கள் கிடைப்பார்களா என்று தெரியாது, எனவே, சென்னை சென்ட்ரல் வந்து அங்கிருந்துதான் வேறொரு வாடிக்கையாளரை ஏற்ற வேண்டும். சென்ட்ரலிலிருந்து ஒருவர் சோழிங்கநல்லூர் போக வேண்டும் என்றால், போக்குவரத்து நெரிசலில் சோழிங்கநல்லூரை அடைய எப்படியும் இரவு 9 மணி ஆகிவிடும். மீதமுள்ள 2 மணி நேரத்தில் நிறுவனம் நிர்ணயித்த இலக்கை பூர்த்தி செய்ய முடியாது.

இதனால், முதல் 2 சேவைகளை எவ்வளவு கஷ்டப்பட்டு இயக்கியிருந்தாலும், வர வேண்டிய தொகை வராது. குறிப்பிட்ட அந்த நேரத்துக்குள் நிறுவனம் சொல்கிற எண்ணிக்கையில் சேவைகளை வழங்க வேண்டும் என்பதால், சில ஓட்டுநர்கள் வண்டியை விரைவாக ஓட்டுகின்றனர். அப்போது, பயணிகளுக்கும், ஓட்டுநர்களுக்கும் இடையே சண்டை வருகிறது.

இதனால், வண்டியை விட்டு கீழே இறங்கிவிடும் வாடிக்கை யாளர்கள், தங்களது மொபைல் அப்ளிகேஷனில், தாங்கள் வந்த டிரைவருக்கு குறைவான மதிப்பீட் டினை அளிப்பதோடு சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு புகார் அனுப்பு கின்றனர். சிலர் காவல் நிலையம் வரை செல்கின்றனர்.

இதனால், ஓட்டுநர்களுக்கு சேர வேண்டிய தொகையில் கணிசமான அளவை பிடித்தம் செய்யும் நிறுவனம், விசாரணை என்று கூறியும் அலைக்கழிக்கிறது. பீக் ஹவரில் அதிக தூரம் செல்வதற்காக வாடிக்கையாளர் அழைப்பதை ஓட்டுநர் தவிர்த்தாலும், நிறுவனத்திடம் புகார் அளிக்க முடியும். இந்த வகையிலும் ஓட்டுநர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

ஒரு வாடிக்கையாளர் காரில் பயணம் செய்கிறார் என்றால், பயணம் தொடங்கியது பற்றிய விவரம் டிரைவரின் மொபைல் அப்ளிகேஷன் மூலம் அந்த நிறுவனத்துக்கு சென்றுவிடும். பயணம் முடித்ததும், வாடிக்கையாளர்களுக்கான பயணக் கட்டணத்தை, ஓட்டுநரின் மொபைலுக்கு நிறுவனம் அனுப்பும். இந்தக் கட்டணத்தை ஓட்டுநர் முடிவு செய்ய முடியாது. ஆனால், இந்தக் கட்டணங்கள் ஒரே மாதிரி இருப்பதில்லை.

தியாகராய நகரிலிருந்து மயிலாப்பூர் செல்ல ஒரு முறை ரூ.150 வசூலிக்கும் நிறுவனம், வேறு ஒரு தினத்தில் ரூ.400 வரை வசூலிக்கும். இதனாலும், ஓட்டுநர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் பிரச்சினை வருகிறது. இந்த பிரச்சினைக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வண்ணம், நிரந்தரமான சீரான கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும். இத்தனை சேவைகளை வழங்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தக் கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

20 mins ago

தமிழகம்

27 mins ago

தமிழகம்

33 mins ago

தமிழகம்

38 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

56 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்