திருநெல்வேலி மாவட்டத்தில் காவல்கிணறு பகுதியில் தேரிக் காட்டில் அளவுக்கு அதிகமாக மணல் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது. இதனால் தேரிக்காடுகள் அழிவின் விளிப்புக்கு தள்ளப்பட்டிருக்கின்றன. இப்பகுதியில் உள்ள 27 ஏக்கர் தேரிக்காட்டில் 90 சதவீதம் அழிக்கப்பட்டுள்ள தாக இப்பகுதி மக்கள் தெரிவிக் கிறார்கள்.
திருநெல்வேலி மாவட்டத்தில் ராதாபுரம் வட்டத்தில் மட்டும் 150 சதுர கி.மீ. பரப்புக்கு தேரிக்காடுகள் பரந்து விரிந்திருக்கின்றன. தென் மேற்கு பருவ காலங்களில் வீசும் பலத்த காற்றானது மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியின் மேற்பரப்பில் உள்ள கனிம வளம் கொண்ட இந்த மணலை அடித்துவந்து சிறுக சிறுக சேகர மாகி இந்த தேரிக்காடுகள் உரு வானதாக இயற்கை ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள்.
சிவப்பு களிமண் துகள்கள் மட்டுமின்றி டைட்டானியம் டை ஆக்ஸைடு பெருமளவில் இந்த தேரிக்காட்டு மணல் குன்றுகளில் காணப்படுகின்றன. இந்த தேரிக் காட்டில் செங்கொழுஞ்சி, நிலச் சடைச்சி, தேரிவிடத்தலை, முசு முசுக்கை, நஞ்சறுப்பான், பால் செடி, பிரண்டை, அப்பக்கோவை என்று பல்வேறு அரிய மூலிகை களும், முள்எலி, புனுகுப்பூனை, காட்டுப்பூனை போன்றவையும் உள்ளன.
மணல் மாஃபியா கும்பல்
இத்தகைய அரிய உயிர்ச் சூழலை கொண்ட தேரிமணல் காடுகள் தற்போது கபளீகரம் செய்யப்பட்டு வருவது குறித்து சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கிறார்கள். மணல் மாஃபியா கும்பல்கள், அரசியல் வாதிகள், அரசுத்துறை அதிகாரி கள், போலீஸாரின் ஒத்துழைப் புடன் தொடர்ந்து தேரி மணலை அளவுக்கு அதிகமாக அள்ளி எடுத்து சென்றுகொண்டிருக்கிறார்கள்.
பொதுமக்கள் புகார்
மணல் கொள்ளையை தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி ராதாபுரம் பகுதி மக்கள் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் சேரன்மகாதேவி சார் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மனு அளிக்கப்பட்டுள்ளது.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ள தாவது: திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் வட்டம் பெருங்குடி கிராமம், வடக்கன்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட காவல்கி ணறுக்கு தெற்கே உள்ள தேரிக்காடு சில ஆண்டுகளுக்கு முன்புவரை பனைமரங்கள் நிறைந்த பகுதியாக காட்சியளித்தது. ஆரல்வாய்மொழி கணவாய் வழியாக வீசிவந்த காற்றால் காவல்கிணறுக்கு தெற்கே உள்ள பொத்தைக்கு கிழக்கே மணல் தேங்கத் தொடங்கியது.
அவ்வாறு பல நூற்றாண்டு களாய் மணல் தேங்கி உருவாகியதுதான் இந்த மணல் பொத்தை (தேரிக்காடு). எங்கள் முன்னோர்கள் திருப் பெருந்தேரி என்று இதை அழைத்தனர். நாட்டிலேயே தென்தமிழகத்தில்தான் இந்த அரியவகை தேரிக்காடுகள் உள்ளன. அவ்வாறு உருவாகிய தேரிக்காட்டில் சில ஆண்டுகளாக அதிக அளவில் மணல் அள்ளப்படுகின்றன. இதனால், தேரிக்காடு அழிவின் விளிம்பில் உள்ளதோடு, சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துவிட்டது. நீரில் உப்புத்தன்மை அதிகரித்துள்ளது. தேரியில் உள்ள ஆயிரக்கணக்கான பனை மரங்கள் உட்பட பல மரங்களும் மணல் அள்ளுவதால் அழிக்கப்பட்டு வருகின்றன. தேரியில் மணல் அள்ளுவதை உடனடியாக தடுக்காவிட்டால் தேரிக்காடுகள் இருந்த தடம் தெரியாமல்போகும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
90 சதவீதம் பாதிப்பு
இது குறித்து சமூக ஆர்வலர் சேய கிறிஸ்டோபர் நேற்று கூறும்போது, “காவல்கிணறு பகுதியில் மட்டும் 27 ஏக்கரில் தேரி காடுகள் பரவியிருந்தன. தற்போது தேரிமணல் குன்றுகளின் அடையாளம் தெரியாத அளவுக்கு தோண்டி எடுத்துள்ளனர். தேரிக்காடுகளில் நின்றிருந்த பனைமரங்களும் விழுந்து கிடக்கின்றன. தற்போது 90 சதவீதம் அளவுக்கு தேரிமணல் காடுகளை அழித்துவிட்டனர். சில இடங்களில் சமதள பகுதிகளில் ஆழமாக தோண்டி மணல் எடுத்து வருகிறார்கள். இதை அரசு அதிகாரிகள் தடுத்து நிறுத்த வேண்டும்” என்றார் அவர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
24 mins ago
தமிழகம்
49 mins ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
20 hours ago