அதிக கட்டணம் வசூலித்த 500 ஆட்டோக்களுக்கு அபராதம்: 100 ஆட்டோக்கள் பறிமுதல்

கடந்த 3 நாட்களில் அதிக கட்டணம் வசூலித்த 500 ஆட்டோக்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், 100 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பாக போக்கு வரத்து துறையின் ஆணையரக அதிகாரிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:

‘‘ஆட்டோக்களுக்கு நிர்ணயிக் கப்பட்டதை விட, அதிக கட்டணம் வசூல், விதிமுறைகள் மீறல், ஆவணங்கள் சரிபார்த்தல் உள் ளிட்ட பணிகளை போக்குவரத்து மற்றும் போலீஸார் இணைந்து நடத்தி வருகிறோம். விதிமுறை கள் மீறல், அதிக கட்டணம் வசூல் போன்ற நடவடிக்கை ஈடுபடுவோருக்கு ரூ.100 முதல் ரூ.2,500 வரை அபராதம் வசூ லிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி, மக்கள் நடமாட்டம் அதிகமாகவுள்ள சென்ட்ரல், எழும்பூர், திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, கோடம் பாக்கம், அசோக்நகர், தாம்பரம், திருவான்மியூர், மாம்பலம் உள்ளிட்ட 62 இடங்களில் தேர்வுசெய்யப்பட்டு ஆய்வு நடத்தப்படுகிறது.

இதற்காக, 24 சிறப்பு குழுக்கள் அமைக் கப்பட்டு அதிடியாக ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 3 நாட்களில் மட்டும் சுமார் 4,500 ஆட்டோக்களில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

இதில், அதிக கட்டணம் வசூலித்ததாக கூறி, 500 ஆட்டோக்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், 100 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து புகாரில் சிக்கினால் ஆட்டோ பர்மிட் ரத்து செய்யப்படும்’’ என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE