ஏற்காடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் மாறனை ஆதரித்து தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை முதல் டிச. 2-ம் தேதி வரை 4 நாட்கள் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
ஏற்காடு இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் மாறன் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து தி.மு.க. எம்.பி. கனிமொழி இரண்டு நாட்கள் பிரச்சாரம் செய்துள்ளார். உடல் நிலை காரணமாக ஏற்காடு தொகுதியில் தி.மு.க. தலைவர் கருணாநிதி பிரச்சாரம் மேற்கொள்ளவில்லை.
நாளை மாலை 4 மணிக்கு கக்கன் காலனியில் பிரச்சாரத்தை தொடங்குகிறார் ஸ்டாலின். அதன்பிறகு உடையாப்பட்டி, அதிகாரிப்பட்டி, மாசி நாயக்கன்பட்டி, அயோத்தியாப்பட்டணம் (ஆத்தூர் பேருந்து நிறுத்தம்), அயோத்தியாப்பட்டணம் (இராமர் கோவில்), மேட்டுப்பட்டி தாதனூர், தேவாங்கர் காலனி, குள்ளம்பட்டி, பாலாஜி காலனி, சந்தியா காலனி, வரட்டேரிக்காடு முட்டைக்கடை. மின்னாம்பள்ளி (மாரியம்மன் கோவில் திடல்), செல்லியம்பாளையம் (அருந்ததியர் காலனி), அ.நா. மங்கலம், ஜலகண்டாபுரம், கூட்டாத்துப்பட்டி, விளாம்பட்டி, அனுப்பூர், எஸ்.என். மங்கலம், கருமா புரம் வழியாக இரவு 9.45 மணிக்கு மேட்டுபட்டியில் பிரசாரத்தை முடிக்கிறார்.
வரும் 30-ம் தேதி மாலை 4 மணிக்கு ராமலிங்கபுரத்தில் பிரசாரம் தொடங்குகிறார். இரவு அயோத்தியா பட்டணத்தில் பிரசாரத்தை முடிக்கிறார்.
வரும் டிசம்பர் 1-ம் தேதி காலை 10.05 மணிக்கு ஏற்காடு டவுனில் பிரசாரம் தொடங்குகிறார்.ஆச்சாங்குட்டப்பட்டி, பருத்திக்காடு (பூவனூர்), சுக்கம்பட்டி (பேருந்து நிறுத்தம்), வலசையூர், பள்ளிப்பட்டி, தைலானூர் (பேருந்து நிறுத்தம்), சின்னனூர், வீராணம், சின்ன வீராணம், கத்தாளப்பாடி, வழியாக இரவு டி.பெருமாபாளையத்தில் பிரசாரத்தை முடிக்கிறார்.
2ம் தேதி கோலாத்துக்கோம்பை யில் பிரசாரம் தொடங்கி நீர்முள்ளிக் குட்டை, பள்ளத்தாதனூர், சி.என்.பாளையம், சந்திரபிள்ளைவலசு, குறிச்சி, புழுதிக்குட்டை, தும்பல், பாப்பநாயக்கன்பட்டி, கருமந்துறை, பேளூர், அத்தனூர்பட்டி, துக்கியாம் பாளையம், வாழப்பாடி வழியாக இரவு பேரூரில் பிரசாரத்தை முடிக்கிறார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago