அரசு வழங்கிய ஒரு சென்ட் இடத்துக்கு பட்டா கேட்டு 8 ஆண்டுகளாக போராடும் மக்கள்: அதிகாரிகள் அலைக்கழிப்பதாக புகார்

By பெ.ஜேம்ஸ்குமார்

அரசு வழங்கிய நிலத்துக்கு பட்டா வழங் கக் கோரி கடந்த 8 ஆண்டுகளாக பெருங்களத்தூர் பகுதி மக்கள் போராடி வருகின்றனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் அலைக்கழித்து வருவதாக அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

தாம்பரம் தொகுதிக்குட்பட்ட பெருங் களத்தூர் பேரூராட்சி சமத்துவ பெரியார் நகர், அன்னை அஞ்சுகம் நகர் பகுதியில் 1,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. பள்ளிக்கரணை, கோவி லம்பாக்கம், ஆதம்பாக்கம், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் ஏரி ஆக்கிரமிப்பை அகற்றியதாலும், நந்தம்பாக்கம் பகுதி யில் தீ விபத்திலும் பாதிக்கப்பட்ட குடும் பங்களுக்கு மாற்று இடமாக மேற் கண்ட பகுதியில் குடும்பத்துக்கு ஒரு சென்ட் வீதம் 2009-ம் ஆண்டு அரசு வழங்கியது.

இந்த இடத்துக்கு பட்டா வழங்கக் கோரி 2009-ம் ஆண்டு முதல் ஆட்சியர், தாசில்தார், சட்டப்பேரவை உறுப் பினர், அமைச்சர்கள், முதல்வரின் தனிப்பிரிவு என பல தரப்பிலும் மனு அளித்துப் பார்த்தனர். யாரும் எந்த நட வடிக்கையும் எடுக்காததால் அப்பகுதி மக்கள் பல போராட்டங்களை நடத்தி னர். அதன்பிறகும் நடவடிக்கை இல்லை. அதிகாரிகள் தங்களைக் கண்டுகொள் ளாமல் தொடர்ந்து பட்டா வழங்காமல் புறக்கணிப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதுகுறித்து சமத்துவ பெரியார் நகர் குடியிருப்போர் நலச் சங்க தலைவர் ரஞ்சன், ‘தி இந்து’விடம் கூறியதாவது:

மாற்று இடம் வழங்கிய பிறகு, அங்கு வீடு கட்டுவதற்கு மக்கள் மிகவும் அவதிப்பட்டனர். பட்டா இல்லாததால் வங்கியில் கடன் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இது தொடர்பாக பல போராட் டங்கள் நடத்தியும், அனைத்து அதிகார மையங்களுக்கு மனு கொடுத்தும் அடிப்படை வசதிகள் மட்டுமே கிடைத்தது. ஆனால், பட்டா கிடைக்கவில்லை . 2009-ம் ஆண்டு தலா ஒரு சென்ட் வீதம், 721 குடும்பங்களுக்கு நிலம் வழங்கப்பட்டது. ஆனால் அதே இடம் 2010-ம் ஆண்டு தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த இடம் குடிசை மாற்று வாரியத் துக்கு ஒதுக்கப்பட்டதாக கூறி எங்களுக்கு பட்டா வழங்க வருவாய்த் துறையினர் தயங்குகின்றனர்.

ஆனால், பல்வேறு காரணங்களால் வீடு இழந்தவர்களுக்கு இங்கு மாற்று இடமும் வழங்கி வரு கின்றனர். அதிகாரிகள் இரட்டை நிலையை கடைபிடிக்கின்றனர். பட்டா வழங்க மாவட்ட நிர்வாகம் உறுதியான நடவடிக்கை எடுக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து வட்டாட்சியர் குமுதாவிடம் கேட்டபோது, ‘‘நான் பொறுப்பேற்று சில மாதங்கள்தான் ஆகிறது . இங்கு பணிபுரிபவர்களும் புதியவர்கள். பட்டா தொடர்பாக அலுவலகத்தில் உள்ள கோப்புகளை ஆய்வு செய்து, உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

21 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்