தமிழ் வழிக்கல்வி பரப்புரை இயக்கம் உண்ணாவிரதப் போராட்டம்

By செய்திப்பிரிவு

கிராம நிர்வாக அலுவலர் பணியை (வி.ஏ.ஓ.,) தமிழ் வழியில் படித்தவர்களுக்கு வழங்குதல் உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தழிழ்வழிக்கல்வி பரப்புரை இயக்கம் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

தமிழ்வழிக் கல்வி பரப்புரை இயக்கம், மனித நேய மக்கள் பாசறை சார்பில், திருவள்ளூர் மாவட்டம், ஆவடியில் உண்ணா விரதப் போராட்டம் நடைபெற்றது. இலவச தமிழ் நூலகத்தின் நிறுவனர் மதிவசந்தம், செல்வம், அகத்தியதாசன் முன்னிலை வகித்தனர். மனிதநேய மக்கள் பாசறையை சேர்ந்த நீலகண்டன் தலைமை வகித்தார். தமிழ்வழிக் கல்வி பரப்புரை இயக்கத்தை சேர்ந்த தமிழ்ச்சிற்பி வரவேற்றார்.

திருவள்ளுவர் மழலையர் தொடக்கப்பள்ளி இறைபொற் கொடி, தமிழ் பண்பாட்டு சங்கத் தின் தமிழன், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் நாச்சி யப்பன் உள்ளிட்டோர் விளக்க உரை ஆற்றினர். அதில், இந்த ஆண்டில் கிராம நிர்வாக அலுவலர் பணிக்கு தேர்வு செய்யப்பட இருக்கும் 2,342 பேரும், 108 உதவிப் பொறியாளர் பணிக்கும் தமிழ்வழியில் படித்தவரையே பணியில் அமர்த்த வேண்டும். 2010-ம் ஆண்டு தமிழ் வழியில் கட்டிடப் பொறியாளர், இயந்திரப் பொறியாளர் பட்டப் படிப்பு படித்தோர்க்கு உடனே பணி வழங்க வேண்டும். அரசுக் கல்லூரியில் செவிலியர் பயிற்சி பெற்றவர்களுக்கே அரசு மருத்துவமனையில் பணி அமர்த்த வேண்டும் உள்ளிட்ட எட்டு அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தப்பட்டது. தமிழ்வழிக் கல்வி பரப்புரை இயக்கத்தின் சிவ.காளிதாசன் நிறைவுரை ஆற்றினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

36 mins ago

தமிழகம்

42 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்