பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்கு ரூ.2 ஆயிரம் ஊதிய உயர்வு: 16,500 பேர் பயன்பெறுவர்

அரசு பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர சிறப்பாசிரியர்களின் தொகுப்பூதியத்தை ரூ.7 ஆயிரமாக உயர்த்தி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆண்டு அரசு பள்ளி களில் ஏறத்தாழ 16,500 சிறப் பாசிரியர்கள் (தையல், ஓவியம், இசை, உடற்கல்வி) தொகுப்பூதி யத்தில் நியமிக்கப்பட்டார்கள். அவர்கள் வாரத்தில் 3 நாட்க ளுக்கு தினமும் அரை நாள் பணி என்ற அடிப்படையில் பணிபுரிந்து வருகிறார்கள். இதற்காக அவர் களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் தொகுப்பூதியமாக வழங்கப் படுகிறது.

தொகுப்பூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும், கலந்தாய்வு மூலம் இடமாறுதல் வழங்க வேண்டும் என்றும் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்துவந்தனர். கடந்த 3 நாட்களுக்கு முன்பு பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சுமார் 100 பேர் தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வி அமைச்சர் கே.சி.வீரமணியையும், துறையின் முதன்மைச் செயலாளர் டி.சபீதாவையும் சந்தித்து தங்கள் கோரிக்கைகளை முறையிட்டனர்.

ரூ.7 ஆயிரமாக உயர்வு

இந்த நிலையில், பகுதிநேர சிறப்பாசிரியர்களின் தொகுப்பூதி யத்தை கடந்த ஏப்ரல் மாதம் முதல் ரூ.5 ஆயிரத்திலிருந்து ரூ.7 ஆயிரமாக உயர்த்தி வழங்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதோடு சம்பளத்தை அடுத்த மாதம் முதல் ஆன்லைன் மூலம் பட்டுவாடா (இசிஎஸ் முறை) செய்யவும் உத்தரவிட்டுள்ளது. இதற்கான அரசாணையை பள்ளிக்கல்வித் துறையின் முதன் மைச் செயலாளர் டி.சபீதா வெளி யிட்டுள்ளார். ஊதிய உயர்வு கடந்த ஏப்ரல் முதல் முன்தேதியிட்டு அறிவிக்கப்பட்டிருப்பதால் பகுதிநேர ஆசிரியர்களுக்கு 7 மாதங்களுக்கான நிலுவைத் தொகை (ரூ.14 ஆயிரம்) கிடைக்கும் என்பது குறிப்பிடத் தக்கது.

பகுதி நேர சிறப்பாசிரியர்களின் தொகுப்பூதியத்தை ரூ.7 ஆயிரமாக உயர்த்தியதற்காக தமிழ்நாடு கலை ஆசிரியர்கள் நலச் சங்க மாநிலத் தலைவர் எஸ்.ஏ.ராஜ்குமார் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE