அம்மா பண்ணை மகளிர் குழுக்களின் முகாம் நவ.21-ல் தொடங்கப்படும்: ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் தகவல்

அம்மா பண்ணை மகளிர் குழுக் களின் தொடக்க முகாம் நவம்பர் 21-ம் தேதி நடைபெறும் என்று வேளாண்மைத் துறை அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அரசு வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப் பதாவது:

தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ண மூர்த்தி தலைமையில் தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

உயர் ரக விதை மற்றும் தரமான நடவுச் செடிகள் அனைத்து மாவட்ட விவசாயிகளுக்கும் வழங்க ஒருங் கிணைந்த தோட்டக்கலை அபிவிருத் தித் திட்டம், நீலகிரி மலை வாழ் மக்கள் மேம்பாட்டிற்கான மலைப்பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் மானியம் வழங்குவது குறித்தும், தோட்டக் கலை பயிர்களின் உற்பத்தித் திறனை இருமடங்காக்கி விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்க அனைத்துத் திட்டப் பணிகளையும் குறித்த காலத்தில் குறிப்பாக சிறு, குறு விவசாயிகள் நலன் பெறும் வகையில் நிறைவேற்ற வேண்டும் என்றும் திட்டத்துக்கு உரிய இடுபொருட்கள் அனைத்தும் உரிய காலத்தில் விவசாயிகளிடத்தில் சென்றடைய உரிய நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுரை வழங்கினார்

முன்னாள் தமிழக முதல்வர் ஜெய லலிதா அறிவித்த அம்மா பண்ணை மகளிர் குழுக்களின் தொடக்க முகாம் நவம்பர் 21 அன்று தமிழகமெங்கும் அனைத்து வட்டாரங்களிலும் தொடங் கிட அமைச்சர் அறிவுறுத்தினார்.

மேலும், சென்னை, கோவை, திருச்சி, மதுரை மற்றும் சேலம் பெருநகரங்களைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் காய்கறி உற்பத்தி யினை அதிகரிக்கும் வண்ணம் உற்பத்தி யாளர் மற்றும் நுகர்வோரை இணைக்கும் முகமாக செயல்படுத்தப் பட்டு வரும் பெருநகர காய்கறி தொகுப்பு வளர்ச்சித் திட்டத்தின் செயல் பாடுகள் குறித்து தோட்டக்கலை இயக்குநர் விளக்கம் அளித்தார்.

இந்த ஆய்வுக்கூட்டத்தில் தோட்டக் கலை துறையின் இயக்குநர் லி.சித்ர சேனன் மற்றும் அனைத்து மாவட்ட தோட்டக்கலை உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE