பெண் இன்ஜினியர் கொலை: சிபிசிஐடிக்கு வழக்கு மாற்றம்; துப்பு கொடுத்தால் ரூ.2 லட்சம்

By செய்திப்பிரிவு

கேளம்பாக்கம் அடுத்த சிறுசேரி தொழிற்பேட்டையில் தகவல் தொழில்நுட்பப் பொறியாளர் உமாமகேஸ்வரி கொலை வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.

சேலம், ஆத்தூரைச் சேர்ந்த உமா மகேஸ்வரி சிறுசேரி தொழிற்பேட்டையில் உள்ள டிசிஎஸ் நிறுவனத்தில் தகவல் தொழில்நுட்ப பொறியாளராக வேலை பார்த்து வந்தார். கடந்த பிப்ரவரி 13-ம் தேதி பணிக்குச் சென்றவர், பின்பு வீடு திரும்பவில்லை. அவரை காணவில்லை என கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் 14-ம் தேதி அவரது தந்தை புகார் அளித்தார்.

இந்நிலையில் வெட்டு காயங்களுடன், சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் அடர்ந்த புதருக்குள் அழுகிய நிலையில் அவரது உடல் சனிக்கிழமை மீட்கப்பட்டது.

இந்நிலையில் இந்த கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி ராமானுஜம் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

13.2.2014 அன்று இரவு 10 மணி அளவில் சிறுசேரி தகவல் தொழில்நுட்பப் பூங்கா வில் உள்ள தனது அலுவலகத்திலிருந்து வேலை முடித்து புறப்பட்ட பெண், பின்னர் காணவில்லை. சிறுசேரி சிப்காட் வளாகத்தில் புதர்களின் நடுவில் அப்பெண்ணின் சடலம் காயங்களுடன் 22.2.2014 அன்று கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த கொலை சம்பவம் குறித்து பயன்படக்கூடிய தகவல்கள் தெரிந்தவர்கள் 044-2250 2500, 044-2250 2510, 98410 59989 ஆகிய ஏதேனும் ஒரு எண்ணைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். cbcyber@nic.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தெரிவிக்கலாம்.

குற்றவாளிகளை அடை யாளம் காணும் வகையிலோ அல்லது அவர்களைப் பிடிக்க உதவும் வகையிலோ உபயோக மான தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.2 லட்சம் வரை பரிசுத் தொகை வழங்கப்படும். முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, இவ்வழக்கு விசாரணையை சிபிசிஐடி மேற்கொள்ளும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

35 mins ago

தமிழகம்

48 mins ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்