வனப் பகுதி மேம்பாட்டுக்கு அரசு ரூ. 35.62 கோடி தமிழக அரசு ஒதுக்கீடு

வன விலங்கு வேட்டையைத் தடுக்கும் முகாம் அமைத்தல் மற்றும் வனப்பகுதிகளில் மேம்பாட்டுத் திட்டங்களை உருவாக்கு வதற்கு நடப்பு நிதியாண்டில் ரூ.35.62 கோடியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.

இதுகுறித்து வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை முதன்மைச் செயலர் ஹன்ஸ்ராஜ் வர்மா பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

வனப்பகுதிகளில் பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களை உருவாக்க தமிழக அரசின் சார்பில் நடப்பாண்டுக்கு 35.62 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியில் வன விலங்குகளை வேட்டையாடுவதைத் தடுக்கும் கண்காணிப்பு முகாம்கள் அமைத் தல், வனப்பகுதியில் உள்ள பழங்குடியின மக்களுக்கு சாலை வசதி ஏற்படுத்துதல், யானைகளை பாதுகாக்கும் வசதி களை மேற்கொள்ளுதல், வன அலுவலர்களுக்கு கூடுதல் குடியிருப்பு வசதி ஏற்படுத்தித் தருதல் போன்ற பணிகள் மேற்கொள் ளப்படும்.

வன விலங்கு வேட்டையைத் தடுக்கும் முகாம் அமைத்தல் மற்றும் வனப்பகுதிகளில் மேம் பாட்டுத் திட்டங்களை உருவாக்கு வதற்கு இந்த நிதி பயன்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE