மதுரை, அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு வீர விளையாட்டின் போது காளைகள் தாக்கியதில் 35 பேர் காயமடைந்தனர்.
பொங்கல் பண்டிகையை ஒட்டி, தமிழர்களின் வீர விளையாட்டாக கடைபிடிக்கப்படும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி மதுரை அவனியாபுரத்தில் செவ்வாய் கிழமை நடைபெற்றது.
உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின் படி ஜல்லிக்கட்டுக்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இருப்பினும் சில காளைகள் அத்துமீறி ஓடியதில், மாடு பிடி வீரர்கள் 19 பேரும், பார்வையாளர்கள் 15 பேரும் ஒரு காவல் அதிகாரியும் மொத்தம் 35 பேர் காயமடைந்தனர்.
அண்டை மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்டிருந்த காளைகள் உள்பட மொத்தம் 338 காளைகள் அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் களம் கண்டன.
போட்டி நடைபெறுவதற்கு முன்னர் ஒவ்வொரு காளையும் தீவிர மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. காளைகளுக்கு போதை வஸ்துகள் ஏதேனும் அளிக்கப்பட்டிருக்கிறதா என்றும் சோதனை செய்யப்பட்டது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago