சென்னை அண்ணாசாலையில் 'பஸ் தினம்' (பஸ் டே) கொண்டாட முயன்ற மாணவர்கள், போலீஸார் இடையே திங்கள்கிழமை மோதல் ஏற்பட்டது. போலீஸார் தடியடி நடத்தியதால், மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அண்ணாசாலையில் 2 மணி நேரத்துக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அயனாவரத்தில் இருந்து பெசன்ட்நகருக்கு 23-சி மாநகரப் பேருந்து திங்கள்கிழமை காலை சென்று கொண்டிருந்தது. பேருந் தில் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். அண்ணாசாலை அண்ணா மேம்பாலம் அருகே பஸ் வந்தது. அப்போது அங் கிருந்த நந்தனம் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் 200-க்கும் மேற்பட்டோர் பஸ்ஸை மறித்து, பயணிகளை கீழே இறக்கிவிட்ட னர். பின்னர் மாலைகள் மற்றும் பெயர் பலகைகளுடன் பஸ் டே கொண்டாட அனைவரும் பேருந் தில் ஏறினர். பேருந்துக்கு முன்பு மாலைகளை கட்டினர்.
போலீஸார் குவிப்பு
அங்கிருந்த போக்குவரத்து போலீஸார், பஸ் தினம் கொண்டாட நீதிமன்றம் தடை விதித்துள்ளது. எனவே பஸ் டே கொண்டாடக் கூடாது; அனைவரும் கலைந்து செல்லுங்கள் என மாணவர்களிடம் தெரிவித்தனர். இதற்கு மறுப்பு தெரிவித்த மாணவர்கள், பஸ் டே கொண்டாட அனுமதிக்க வேண்டும் என்று போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து வாக்குவாதம் முற்றிய நிலையில் மாணவர்களுக்கும், போலீஸாருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த போலீஸ் உயர் அதிகாரிகள் 100-க்கும் மேற்பட்ட போலீஸாருடன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
மாணவர்கள் மீது தடியடி
அப்போது, மாணவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர். மாணவர்கள் சாலையில் இரு புறமும் சிதறி ஓடினர். அதன்பின், போலீஸாரின் நடவடிக்கையை கண்டித்து அண்ணா சாலையில் மாணவர்கள் திடீரென்று கீழே படுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸ் உயர் அதிகாரிகள் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் மாணவர்கள் போராட்டத் தைக் கைவிட்டு பஸ்ஸில் ஏறி கல்லூரிக்கு சென்றனர். பாதுகாப் புக்காக போலீஸார் வாகனத்தில் பஸ்ஸின் பின்னால் சென்றனர். இந்த மோதல் சம்பவத்தால் அண்ணாசாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மாணவர்கள் காயம்
போலீஸார் நடத்திய தடியடியில் 10-க்கும் மேற்பட்ட மாணவர் களுக்கு காயம் ஏற்பட்டது. இந்த மோதல் சம்பவத்தில் கால் தவறி கீழே விழுந்த வேலன் (19) என்ற மாணவரை போலீஸார் சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
'பஸ் டே' தான் ஒரே சந்தோஷம்!
மாணவர்கள் கார்த்திக், சுதேசன் ஆகியோர் கூறியதாவது:
நாங்கள் அரசுக் கல்லூரியில் படிக்கிறோம். விளையாடுவதற்கு எவ்விதமான விளையாட்டு சாதனங்களும் கல்லூரியில் இல்லை. தனியார் கல்லூரிகளில் எல்லாவிதமான வசதிகளும் உள்ளன. ஆனால், அங்கு படிப்பதற்கு லட்சக்கணக்கில் செலவாகும்.
நாங்கள் எங்கு செல்வது. அரசுக் கல்லூரியில் படிக்கும் எங்களுக்கு இருக்கும் ஒரே சந்தோஷமே பஸ் டே கொண்டாடுவதுதான். அதையும் கொண்டாட வேண்டாம் என சொல்வது நியாயமா?
பஸ் டே-க்கு அனுமதி வேண்டும்
நாங்கள் அமைதியாக பஸ் டே கொண்டாடுகிறோம். பொதுமக் களுக்கு எவ்விதமான தொந்தரவும் இருக்காது என்று தெரிவித்தோம். ஆனால், போலீஸார்தான் தேவை யில்லாத வார்த்தைகளால் பேசி வன்முறையை தூண்டினர். தடியடி நடத்தியதில் மாணவர்கள் காயமடைந்துள்ளனர். பஸ் டே கொண்டாட அனுமதிக்க வேண் டும் என்று அவர்கள் கூறினர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
10 mins ago
தமிழகம்
25 mins ago
தமிழகம்
53 mins ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
21 hours ago