'அதிமுக அல்லது திமுக தலைமையிலான கூட்டணியிலேயே நீடிக்க விரும்புகிறோம்'
மக்கள் நல கூட்டு இயக்கத்தில் இருந்து மனித நேய மக்கள் கட்சி விலகியுள்ளது. மமகவின் இந்த திடீர் முடிவு மக்கள் நல கூட்டியக்கத்துக்கு ஒரு பின்னடைவாக கருதப்படுகிறது.
விலகல் குறித்து மனித நேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லா கூறும்போது, "மக்கள் பிரச்சினைகளுக்கு குரல் கொடுப்பதற்காக மட்டுமே மக்கள் நல கூட்டு இயக்கத்தில் இணைந்திருந்தோமே தவிர அதை தேர்தலுக்கான அரசியல் கூட்டணியாக மாற்றிக் கொள்ள ஒருபோதும் கணிக்கவில்லை. அதிமுக அல்லது திமுக தலைமையிலான கூட்டணியிலேயே இணைய விரும்புகிறோம்.
எங்களது இம்முடிவை ஏற்கெனவே மக்கள் நல கூட்டு இயக்கத் தலைவர்களுக்கு தெரிவித்துவிட்டோம். எனவே, வரும் 5-ம் தேதி திருவாரூரில் நடைபெறவுள்ள பொதுக் கூட்டத்த்தில் மமக பங்கேற்காது" என்றார்.
மமக அதிமுக கூட்டணியில் இணையும் என்று கூறப்படுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த ஜவாஹிருல்லா, "அதிமுக எங்களை தங்கள் கூட்டணியில் சேர்த்துக் கொள்ள தயாராக இருக்கிறதா என்பது எங்களுக்கு தெரியவில்லை. அதேவேளையில் பாஜக இல்லாத அணியிலேயே இடன்ம்பெற வேண்டும் என்பதில் மட்டும் நாங்கள் மிகவும் உறுதியாக இருக்கிறோம்.
தற்போதைய சூழலில் அதிமுக, திமுக-வுக்கு எதிராக வலுவான மாற்றுக் கூட்டணியை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகள் மிக மிக குறைவாகவே இருக்கிறது. இத்தகைய சூழலில் அதிமுக அல்லது திமுக தலைமையிலான கூட்டணியிலேயே நீடிக்க விரும்புகிறோம்" என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
37 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
15 hours ago