தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க உரிய நடவடிக்கை: தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உறுதி

By செய்திப்பிரிவு

இலங்கை அரசு சிறைபிடித்து வைத்துள்ள மீனவர்களின் படகுகளை மீட்கவும் மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் தெரிவித்தார்.

ஆண்டுதோறும் நவ.21-ம் தேதி சர்வதேச மீனவர் தினமாக கொண் டாடப்படுகிறது. இதையடுத்து, சென்னையில் நேற்று பாரதிய ஜனதா கட்சி மீனவர் அணி சார்பில் மீன் உணவுத் திருவிழா நடை பெற்றது. 5 மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை மேற்கொண்ட தற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் இவ்விழா நடைபெற்றது.

கட்சியின் மீனவர் பிரிவு மாநில தலைவர் சதீஷ்குமார் தலைமை வகித்தார். மாநில செயலாளர் செம்மலர் சேகர் முன்னிலை வகித்தார். தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, உணவுத் திருவிழாவை தொடங்கி வைத்தார். பின்னர், செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதா வது:

இன்றைய தினம் தமிழக மீனவர்களுக்கு மகிழ்ச்சியான நாள். மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 தமிழக மீனவர்கள் பிரதமர் மேற்கொண்ட முயற்சி காரணமாக விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 1997-ம் ஆண்டு தில்லியில் மீனவர் கள் ஒன்று கூடி ஆழ்கடலில் மீன்பிடிக்க அனுமதி வேண்டும் என வலியுறுத்தினர். ஆனால், காங்கிரஸ் அரசு, இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவில்லை.

இந்நிலையில், அண்மையில் தமிழக மீனவப் பிரதிநிதிகள் மத்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை சந்தித்து பேசினர். அப்போது, ஆழ்கடல் மீன்பிடிக்கும் விஷயத்தில் மத்திய அரசு நிரந்தர தீர்வு காணும். அதற்கு தேவையான படகுகளுக்கு ஆயிரம் கோடி ரூபாய் செலவானாலும் பரவாயில்லை; அதற்கான படகு களை மீனவர்களுக்கு வழங்க மத்திய அரசு நடவடிக்கை மேற் கொள்ளும் என அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உறுதியளித்துள்ளார். மேலும், இலங்கை அரசு பறிமுதல் செய்து வைத்துள்ள தமிழக மீனவர்களின் படகுகளும் ஒவ்வொன்றாக மீட்கப்படும் என உறுதியளித்தார்.

கச்சத்தீவை இலங்கை அரசிடம் இருந்து மீட்க பாரதிய ஜனதா கட்சி, ஜனசங்கம் ஏற்படுத்தப்பட்டக் காலத்தில் இருந்தே வலியுறுத்தி வருகிறது.

அரசியல் பண்ண விரும்பவில்லை

அதிமுக அரசு தங்கள் முயற்சியால்தான் மீனவர்கள் மீட்கப் பட்டதாக கூறுகின்றனர். இவ்விவகா ரத்தில் அரசியல் பண்ண விரும்ப வில்லை. தமிழக அரசு பாதிக் கப்பட்ட 5 மீனவர்களின் குடும்பத் தினருக்கு மாதந்தோறும் உதவித் தொகை வழங்கி வந்துள்ளது. அதேசமயம், பிரதமர் மோடி மேற்கொண்ட முயற்சியும் மீனவர் களின் விடுதலைக்கு காரண மாக அமைந்துள்ளது. இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

இவ்விழாவில், பாஜக மாநில துணைத் தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE