பாஜக தூண்டுதலில்தான் ஜி.கே.வாசன் கட்சி ஆரம்பிக்கிறார்: காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் குற்றச்சாட்டு

பாஜக தூண்டுதலில்தான் ஜி.கே.வாசன் கட்சியை ஆரம்பிக்கிறார் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்தார்.

சிவகங்கையில் நேற்று அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

திமுக தலைவர் கருணாநிதி சந்திப்பு கூட்டணிக்கு அச்சாரமா?

அரசியலில் வேறுபாடுகள் இருந்தாலும், கருணாநிதியைப் பொருத்தவரையில் தமிழுக்குத் தொண்டாற்றியவர். இந்த வயதிலும் அயராது உழைக்கக் கூடியவர். தமிழகத்தின் மூத்த குடிமகன். தமிழகத்தில் உள்ள சுயமரியாதை குடும்பங்களில் அவர்தான் மூத்தவராக உள்ளார். சிறுவயதிலிருந்து என்னை அறிந் தவர் என்ற முறையில் அவரைச் சந்தித்தேன்.

கூட்டணியை முடிவு செய்ய வேண்டியது அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிதான்.

இளைஞர்கள் காங்கிரஸ் கட்சிக்கு வராததற்கான காரணங்களைக் கண்டறிந்தீர்களா?

இளைஞர்கள் வரவில்லை என்று எப்படிச் சொல்லமுடியும்? அதிக அளவில் வந்துள்ளதை நீங்களே பார்த்துள்ளீர்கள்.

இனி காங்கிரஸ் போராட்டக் களத்தில் இறங்குமா?

ஐந்து ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியை சில பேர் முடக்கி வைத்திருந்தார்கள். சில சமயங்களில் அறிக்கை, பேட்டிகளைக் கொடுத்துவிட்டு அமைதியானார்கள். இன்றைக்கு காங்கிரஸ் கட்சியை மக்களுக் காகப் போராடும் இயக்கமாக மாற்ற இருக்கிறோம். காவிரியில் அணை கட்டும் கர்நாடக அரசிடம் பேசிப்பார்ப்போம். மீறி கட்டினால் அவர்களைக் கண்டித்து மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம்.

5 தமிழக மீனவர்கள் விடுத லையை வரவேற்கிறோம். மீனவர் களை விடுதலை செய்துவிட்டார் என்பதற்காக ராஜபக்ச யோக்கியர் ஆகிவிட முடியாது. அங்கு தமிழர் களுக்கு இன்னல்களை செய்து கொண்டிருக்கிறார். இந்தியா கட்டிக்கொடுத்த தமிழர்கள் வீடுகளில் இலங்கை மக்களை குடியேறச் செய்துவருகிறார்.

இலங்கையில் தமிழர்களுக்கு தொடர்ந்து துரோகம் செய்துவரும் ராஜபக்சவை பதவியில் இருந்து தூக்கி எறிவதற்கு இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இலங்கையில் தமிழர்களுக்கு யார் ஆதரவாக இருக்கிறார்களோ அவர்களை பதவியில் அமர்த்துவதற்கான காரியங்களைச் செய்ய வேண்டும்.

மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இந்த நடவடிக்கையை ஏன் எடுக்கவில்லை?

காங்கிரஸ் ஆட்சியில் ராஜபக்சவுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. ஐ.நா. சபையில் இலங்கைத் தமிழர்களுக்கு எதிராகச் செயல்படும் ராஜபக்ச மீது நடவடிக்கை எடுக்க காங்கி ரஸ் அரசு வலியுறுத்தியது.

ஆனால் ராஜபக்சவை வர வழைத்து ரத்தின கம்பள வரவேற்பு அளித்து விருந்தளிக்கும் அரசாக பாஜக அரசு இருப்பதால்தான் அதைச் சொல்கிறோம்.

ஜி.கே.வாசன் பிரிந்து செல்வதை காங்கிரஸை பிளவுபடுத்தும் பாஜக வின் செயலாக கருதுகிறீர்களா?

பாஜக தூண்டுதலில்தான் அவர் (ஜி.கே.வாசன்) பிரிந்து சென்று கட்சியை ஆரம்பிக்கிறார்.

ஜெயலலிதாவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததா?

அவரை நான் தொந்தரவு செய்ய விரும்பவில்லை. தமிழர்களின் கோரிக்கைகள் தொடர்பாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து பேசவிருக்கிறேன்.

இவ்வாறு அவர் பேட்டி அளித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE