சூளைமேடு பகுதியில் பல நாட்களாக தாமதமாக்கப்பட்ட சாலைப் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சூளைமேடு பகுதியில் உள்ள திருவள்ளுவர்புரம் சாலையில் புதியதாக சாலை அமைக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று 19 ம் தேதி ‘தி இந்து’வில் செய்தி வெளியாகி இருந்தது.
இதன் எதிரொலியாக கடந்த செவ்வாய்க்கிழமை முதல் திருவள்ளுவர்புரம் பிரதான சாலையில் சிமென்ட் சாலை போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தற்போது சாலையின் ஒரு பக்கத்தில் சாலை போடும் பணியும் மற்றொரு வழியில் பொது மக்கள் செல்லும் வகையிலும் இரண்டு பிரிவாக சிமென்ட் சாலை அமைக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து மாநகராட்சி அதி காரி ஒருவர் கூறுகையில்,
“மொத்தம் 450 மீட்டர் அளவு கொண்ட திருவள்ளுவர்புரம் சாலையில் தற்போது 250 மீட்டர் பணிகள் முடிவடைந்துள்ளது. மீதம் உள்ள 200 மீட்டர் பணி இன்னும் மூன்று நாட்களில் நிறைவடையும்'' என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago